Showing posts with label Computer. Show all posts
Showing posts with label Computer. Show all posts

Monday, February 8, 2016

குரோம் பிரவுசர்: சில குறிப்புகள்

இணைய உலா வர பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், குரோம் பிரவுசர் முதல் இடம் கொண்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப அதனை வழி அமைத்துக் கொள்ளும் வசதியே இதற்குக் காரணம். மற்றும் இது தரும் பாதுகாப்பு, நம்மை வழி நடத்தும் இடைமுகம், தொடர்ந்து வழங்கப்படும் புதிய வசதிகள் என இதன் தன்மைகள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. 

1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச் செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.

2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.

3. குரோம், அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions/ எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும்.இங்கு “Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.

4. சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். 

5. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும். 

6. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்து பவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.

7. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “-” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.

8. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும். 

9. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt-+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, “Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.

10. எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.

11. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, “On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ““Continue where I left off.”” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்துஇணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.

நன்றி :தினமலர் /கம்ப்யூட்டர் மலர் செய்தி

Sunday, January 10, 2016

2016ல் இந்திய ஸ்மார்ட்போன் தொழில் பிரிவு


நடப்பு 2016 ஆம் ஆண்டில், இந்திய ஸ்மார்ட் போன் தொழில் பிரிவில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட உள்ளன. உலக அளவில், இணையப் பயனாளர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், 50% பேர், மொபைல் போன் வழியாக மட்டுமே, இணைய இணைப்பினை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், நடப்பு ஆண்டில், ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவில், வியக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக, இப்பிரிவில் ஆய்வு மேற்கொள்ளும் அமைப்புகள் அறிவித்துள்ளன.

இணையப் பயன்பாட்டில் ஏற்பட்டு வரும் வேகமான வளர்ச்சி, ஸ்மார்ட் போன் தயாரிப்பிற்குத் துணை நிற்கும். அத்துடன், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கையை உயர்த்தும். 4ஜி / எல்.டி.இ. தொழில் நுட்பம் தரும் ஊக்கத்தில், புரோகிராம்கள் வடிவமைக்கும் தொழில் பிரிவில், முன்னேற்றம் ஏற்படும். இந்த வளர்ச்சியை நாம் சில பிரிவுகளாகக் காணலாம்.

அனைத்து மக்களுக்கான ஸ்மார்ட்போன் பயன்பாடு: 


சாதாரண வசதிகளைக் கொண்ட போன்களின் பயன்பாட்டிலிருந்து, ஸ்மார்ட் போன்களுக்கு மாறுவோரின் எண்ணிக்கை, அபரிதமான எண்ணிக்கையில் உயர இருக்கிறது. இந்த பயனாளர்கள், எப்போதும் தொடர்பில் இருப்பது எத்தகைய வசதிகளை, ஆச்சரியங்களைத் தருகிறது என்பதை வியப்புடன் அனுபவிப்பார்கள். இந்தப் பிரிவில் அடுத்த வளர்ச்சி, மாநில மொழிகளின் பயன்பாட்டில் அமையும். 
ஆங்கிலம் தவிர்த்த இந்திய மொழிகளை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த அப்ளிகேஷன்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் கிடைக்கும். இவை பயன்படுத்துவதில் அதிக பட்ச எளிமையினைக் கொண்டவையாக இருக்கும். ஸ்மார்ட் போன் பயன்படுத்த இருக்கும் அடுத்த 10 கோடி பேருக்கு தங்கள் மொழிப் பயன்பாட்டுடன், மற்றவருடன் தொடர்பு கொள்வதற்கான செலவும் குறைவானதாக அமையும். இது குறித்த விழிப்புணர்ச்சியும் மக்களிடையே அதிகமாகப் பரவும்.

வரி கட்டமைப்பு: 


வர இருக்கும் வணிக வரி அமைப்பிலான மாற்றங்கள், ஸ்மார்ட் போன் தயாரிப்பில், இந்திய நிறுவனங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சீன நாட்டிலிருந்து எளிதாக இனி இந்தியாவிற்குள் போன்கள் வருவது சிரமமாக அமையும். புதிய வரி கட்டமைப்பு, இந்திய நிறுவனங்களுக்கு அவர்களின் செயல்பாட்டிற்கு உதவுவதாகவும், இந்தியா முழுமையும் தங்கள் தயாரிப்புகளைக் கொண்டு சென்று விற்பனை செய்வதில் துணை புரிவதாகவும் அமையும்.

பெரிய திரைகள்: 


ஸ்மார்ட் போன்களில், ஒரு கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியும் பணிகளில் 80% பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், இவற்றின் திரை அளவு பெரியதாக அமையும். அதன் அடிப்படையில், அனைத்துமே பெரிய அளவில் வடிவமைக்கப்படும். இது ஸ்மார்ட் போன் தொழில் பிரிவுகளுக்கு உற்சாகத்தை அளித்து, புதிய மாடல்களை வடிவமைக்க உதவும்.

4ஜி / எல்.டி.இ. பரவலாக்கம்: 


2015 ஆம் ஆண்டிலேயே, 4ஜி மொபைல் இணைப்பு சேவை பரவத் தொடங்கியது. 2016ல் இது வலுப்பெறும். மொபைல் சேவைப் பிரிவில் இயங்கும் பெரிய அளவிலான நிறுவனங்கள், மக்களிடையே பரவலாகத் தங்கள் சேவையைக் கொண்டு சேர்க்கும். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், 4ஜி சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியை எட்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். எல்.டி.இ. ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான புதிய உரிமங்கள், நடப்பு ஆண்டிலும் தரப்பட இருப்பதால், டிஜிட்டல் இந்தியாவினை அமைப்பதில், 4ஜி சேவை நல்ல பங்கினை அளிக்கும். இன்னும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே, 4ஜி பயனாளர்களுடன், 2ஜி மற்றும் 3ஜி பயனாளர்களும் இயங்குவார்கள்.

உள்நாட்டு தயாரிப்பு: 


மொபைல் போன் தயாரிப்பில், இந்திய நிறுவனங்களின் செயல்பாடு, 2016ல் முக்கிய இடத்தைக் கொண்டதாக இருக்கும். தயாரிப்பு திறன் கூடுதலாகும். வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளில் கூடுதல் முதலீடு மேற்கொள்ளப்பட்டு, தயாரிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகும். உள் நாடு மற்றும் வெளிநாடு தயாரிப்புகளுக்கிடையே, நல்ல உற்சாகமான போட்டி இருக்கும். இதனால், மக்களுக்கு நல்ல போன்கள், அவர்கள் வாங்கும் விலையில் கிடைப்பது அதிகரிக்கும். இதனால், புதிய முறை வர்த்தக நிலைப்பாடுகள், ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவில் ஏற்படும். மொபைல் போன் தயாரிப்பில் தேவைப்படும் துணை சாதனங்கள் தயாரிப்பு பிரிவிலும், கூடுதல் எண்ணிக்கையில் நிறுவனங்கள் தோன்றும். உலக அளவில் இத்தகைய சாதனங்களைத் தயாரித்து வழங்குபவர்கள், இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க போட்டியிடுவார்கள். ஆசிய மற்றும் பிற நாடுகளுக்கான சாதனங்களைத் தயாரிக்க, இந்தியாவை ஒரு களமாக அமைக்க திட்டமிடுவார்கள்.

மொபைல் சாதன வழி சேவை: 


மொபைல் வழியாக சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். 20 கோடி ஸ்மார்ட் போன் பயனாளர்களை விரைவில் இந்தியா பெறும். பட்ஜெட் விலை சாதனங்கள், குறைந்த கட்டணத்தில் சேவைகள் மற்றும் சாதனங்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய சேவை என அனைத்துப் பிரிவுகளும் ஒன்றிணைந்து செயலாற்றும் காலம் உருவாகி வருகிறது. இது நடப்பு ஆண்டில் வலுப்பெறும். இதனால் பயனாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும். இதனால், பொழுது போக்கு, பயணங்கள் மேற்கொள்வது, உடல் நலத்திற்கான திட்டங்கள் மற்றும் வங்கி பயன்பாடு ஆகிய சேவைகளை மக்களுக்குச் செம்மையாக வழங்க, நிறுவனங்களிடையே சரியான போட்டி நிலவும். இது புதிய கண்டுபிடிப்புகளையும், சுகமான வசதிகளையும் மக்களுக்குத் தரும்.

நன்றி :தினமலர் /கம்ப்யூட்டர் மலர் செய்தி

Sunday, February 8, 2015

லேப் டாப் வாங்க சில குறிப்புகள்


லேப்டாப் வாங்கப் போறீங்களா?
அதிகமான விலை, கூடுதலான கவனத்துடன் கையாள வேண்டிய நிலை, தூக்கிச் செல்லும் சுமை, ஒத்துழைக்காத பேட்டரி, ஆண்மையை இழக்கச் செய்திடும் தொடர் பயன்பாடு, ரிப்பேர் ஆனால்சரி செய்ய முடியாது என்றெல்லாம் உண்மையும் பொய்மையும் கலந்த காரணங்களால் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்கள் இன்று பலரின் முதுகோடு முதுகாக அமையும் தோழனாக உரு மாறி அனைவரும் விரும்பும் சாதனமாக அமைந்து விட்டது.
டெஸ்க்கில் வைத்துப் பயன்படுத்துவோர் கூட இவ்வளவு பெரிய சி.பி.யூ டவர், மானிட்ட ரெல்லாம் எதற்கு? லேப்டாப்பே வைத்துக் கொள்வோமே என்று எண்ணும் அளவிற்கு லேப் டாப் என்னும் மடிக் கம்ப்யூட்டர்கள் (மடியில் வைத்து பயன்படுத்தும் மடித்து எடுத்துச் செல்லக் கூடிய கம்ப்யூட்டர்கள்) இன்று பிரபலமாகி உள்ளன.
இன்று மார்க்கட்டில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் லேப்டாப் கம்ப்யூட்டருக்கு வரும் விளம்பரங்கள் தான் அதிகம். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தச் சந்தையில் கூடுதல் இடத்தைப் பிடிக்க போட்டி போட்டு வருகின்றன. எச்.பி, டெல், தோஷிபா, சோனி, லெனோவோ, ஏசர்,காம்பேக் என பல பிராண்டுகளின் மாடல்கள் எங்களிடம் இல்லாத வசதியா என தம்பட்டம் அடிக்கின்றன. திரை அளவு, எடை மற்றும் புராசசர் ஆகியவை குறித்து பல அளவுகளைத்தெரிவிக்கின்றன. முதன் முதலாக லேப் டாப் வாங்க முடிவெடுக்கும் ஒருவர் இவர்களின் விளம்பரத்தைப் பார்த்து எந்த முடிவிற்கும் வராமல் குழப்பத்தில் ஆழ்ந்து போகிறார்.
இந்த தகவல்களை எப்படி அலசி ஆய்வு செய்து தனக்கு வேண்டிய சரியான லேப்டாப்பினை முடிவு செய்ய இயலாதவர்களாக பலர் உள்ளனர். இத்தகையவர்கள் முதலில் என்ன முடிவுகளை வரையறை செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம். கீழே தரப்பட்டுள்ளவை அனைத்துமே பொதுவான அனைவருக்கும் தெரிந்தது தான் நீங்கள் எண்ணினால் நல்லதை நினைத்துப் பார்ப்பது சிறந்தது என எடுத்துக் கொள்ளுங்கள்.
1. விலையும் பணியின் தன்மையும்: முதலில் இன்ன விலை என பட்ஜெட் போட்டுக் கொள்ளுங்கள். ரூ.30,000 முதல் ரூ.90,000 வரை பல மாடல்கள் உள்ளன. விலையை நிர்ணயம் செய்கையில் வரி, வாரண்டி காலம், கூடுதல் வாரண்டி என்றால் கட்ட வேண்டிய தொகை என்பதனையும் சேர்த்து கணக்கிடுங்கள். சிறிய நகரங்களில் இருந்தால் லேப் டாப் வாங்கிட பெரிய நகரத்திற்குச் சென்று திரும்பும் செலவினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
2. வேலை என்ன? அடுத்து என்ன வேலையை இந்த லேப் டாப் மூலம் மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று பார்க்கவும். செலிரான் பிராசசர் கொண்ட குறைந்த மெமரி கொண்ட லேப் டாப் தேர்ந்தெடுத்து அதில் போட்டோ ஷாப் மற்றும் படங்கள் எடிட்டிங் அடிக்கடி மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால் சிரமமாகும். எனவே விலையை உங்கள் வேலையின் தன்மையை இணைத்து நிர்ணயம் செய்திடவும்.
3. அளவும் எடையும்: ஸ்கிரீன் அளவு மற்றும் எடையின் அடிப்படையில் லேப் டாப் கம்ப்யூட்டர்களை வகைப்படுத்துகின்றனர். 13,14,15 மற்றும் 17 அங்குல திரை கொண்ட லேப்டாப்கள் உள்ளன. சிறிய திரை கொண்டது எடை குறைவாக இருக்கும்; எடுத்துச் செல்வது எளிது. பேட்டரியின் லைப் வெகு நாட்கள் இருக்கும். 17 அங்குல திரை கொண்ட லேப் டாப் என்றால் செயல்பாடு நன்றாக இருக்கும். எடையும் விலையும் எடுத்துச் செல்வதும் சற்று சிக்கலாக இருக்கும். 14 மற்றும் 15 அங்குல திரை கொண்ட லேப் டாப்கள் இவற்றை அட்ஜஸ்ட் செய்து போவதாக இருக்கும்.
4. பிராசசிங் திறன், ஹார்ட் டிஸ்க் அளவு,மெமரி மற்றும் கிராபிக்ஸ் திறன்: இன்டெல் ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் ஏதேனும் ஒரு புதிய சிப் பிராசசரை அறிமுகப்படுத்துகிறது. குறைந்ததுடூயல் கோர் சிப் லேப்டாப்பில் இருக்கவேண்டும். எனவே இன்டெல் நிறுவனத்தின் டூயல் கோர் 2 சிப் அல்லது ஏ.எம்.டி. எக்ஸ்2 பிராசசர் இருக்க வேண்டும். சிங்கிள் கோர் பிராசசர் என்றால் ஏற்றுக் கொள்ளவே வேண்டாம். அவை எல்லாம் காலாவதியாகி விட்டன. அடுத்து எந்த அளவில் ஹார்ட் டிஸ்க் இருக்க வேண்டும். பட்ஜெட் விலையில் கிடைக்கும் லேப்டாப்களில் கூட 160 ஜிபி ஹார்ட் டிஸ்க் உள்ளது. பலருக்கு இது போதுமானது. எனவே உங்கள் லேப்டாப்பில் குறைந்தது இது இருக்க வேண்டும். அடுத்ததாக ராம் மெமரி; பல லேப் டாப்களில் இது 1 ஜிபியாக இருக்கிறது. ஆனால் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்பாட்டிற்கு இது சரியாக அமைய வில்லை. எனவே 2 ஜிபி சிஸ்டம் மெமரி உள்ளதாகப் பார்க்கவும்.
அடுத்ததாக டிஸ்கிரீட் கிராபிக்ஸ் (Discrete Graphics):  என்வீடியா மற்றும் ஏ.டி.ஐ (Nvidia’s/ATI)  வழங்கும் கிராபிக்ஸ் வசதிகளை இந்த சொற்களால் குறிப்பிடுகின்றனர். இதில் என்வீடியா தான் இன்றைக்கு முன்னணியில் உள்ளது. இன்டெல் நிறுவனம் தரும் இன்டக்ரெய்டட் சொல்யூசன்ஸ் சாதாரண கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு மட்டுமே சரியாக இருக்கும்.
5.பேட்டரியின் திறன்: பொதுவாக பேட்டரிகளை அது கொண்டுள்ள செல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அளவிடுவார்கள். 4 செல் கொண்ட பேட்டரி லேப் டாப்பின் எடையை வெகுவாகக் குறைத்துவிடும்; ஆனால் பேட்டரி லைப் மிகவும் குறைந்துவிடும். 9 செல் பேட்டரி எடையை மிக அதிகமாக்கும். ஆனால் அந்த அளவிற்கு செயல் திறன் பெரிய அளவிலான வேறுபாட்டில் இருக்காது. எனவே 6 செல்கள் கொண்ட பேட்டரி தான் அனைவரும் விரும்பும் பேட்டரியாகவும் பல லேப்டாப்கள் கொண்டதாகவும் உள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இரண்டரை மணி நேரம் லேப்டாப்பைப் பயன்படுத்தலாம்.
6. மற்றவற்றுடன் தொடர்பு: இது பல வகை தொடர்பினை உள்ளடக்கியது. யு.எஸ்.பி., ஈதர்நெட் மற்றும் பயர்வயர். பெரும்பாலான லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஸ்டாண்டர்டாக சிலவற்றை ஒருங்கிணைந்த வடிவமைப்பில் தருகின்றனர். இருப்பினும் 3 யு.எஸ்.பி. போர்ட் உள்ளது மிக நல்லது. அத்துடன் விஜிஏ / டிவிஐ (VGA/DVI)  போர்ட் இருக்க வேண்டும். வயர்லெஸ் கனெக்டிவிடி பக்கம் பார்த்தால் 802.11 a/b/g கட்டாயமாகத் தேவை. இதனை 802.11n க்கு மேம்படுத்த முடியும் என்றால் நிச்சயம் அதனையே கேட்கவும். இதனால் ஸ்பீட் அதிகமாகக் கிடைக்கும். புளுடூத் 2.0 ஈ.டி.ஆர். தரப்படுவதும் நல்லது. இதன் மூலம் போன் போன்ற சாதனத்துடன் பைல்களைப் பரிமாறுவது எளிதாகும்.
7. வாரண்டி: அனைத்து லேப்டாப்களும் குறைந்தது ஓராண்டு வாரண்டி தருகின்றனர். இது ரிப்பேர் மற்றும் தயாரிப்பில் காணப்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்கின்றன. இந்த காலத்திற்குப் பின் பிரச்னை வந்து ரிப்பேர் செய்திடப் போனால் எக்கச் சக்க செலவாகிறது. இந்த அதிர்ச்சி பின்னாளில் ஏற் படாமல் தடுக்க நீட்டிக் கப்பட்ட வாரண்டி தருவதாக இருந்தால் கேட்டு வாங்கவும். அல்லது தொடக்க வாரண்டியே மூன்று ஆண்டுகள் இருந்தால் கேட்டு வாங்கலாம்.
சரி வாங்கிவிட்டீர்களா! அடுத்து என்ன செய்திட வேண்டும்?
1. கிராப் வேர்களை  (crapware)  நீக்குங்கள்: முதல் முதலில் உங்கள் லேப்டாப்பினை இயக்கத் தொடங்கியவுடன் நிறைய சோதனை புரோகிராம்கள், தேவையற்ற பவர் மேனேஜ் மெண்ட் புரோகிராம்கள், புரடக்டிவிடி டூல்ஸ் என்ற பெயரில் நமக்கு என்றும் பயன்படாத புரோகிராம்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் தயாரிப்பாளருக்கு பிடிக்கும் என்பதால் மொத்தமாகப் பதிந்திருப்பார்கள். இவை அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்து நீக்கி விட்டு உங்களுக்குப் பிடித்த புரோகிராம்களை மட்டும் இன்ஸ்டால் செய்திடவும்.
2. பேட்டரி பராமரிப்பு: பொதுவாக லேப்டாப் பேட்டரிகள் எல்லாம் எப்படி பயன்படுத்தினாலும் சரியாகவே இயங்கும். எளிதாக வீணாகிப் போகாது. இருந்தாலும் இவை கெட்டுப் போகாமல் இருக்க 2அல்லது திறன் இழக்காமல் இருக்க குறிப்பிட்ட கால கட்டத்தில் பேட்டரியை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்திட வேண்டும். மேலும் ஓரடியாக பேட்டரியை சார்ஜ் செய்திடக் கூடாது. நீங்கள் லேப் டாப் பயன்படுத்த வில்லை என்றால் மெயின் பிளக்கிலிருந்து பேட்டரிக்கான கனெக்ஷனை எடுத்துவிட வேண்டும்.
மேலே கூறப்பட்டவை எல்லாம் சில அடிப்படை செய்திகளே. எந்த ஒரு லேப் டாப் வாங்குவதாக இருந்தாலும் அவற்றின் திறன் கொண்ட மற்ற லேப் டாப்களுடன் ஒப்பிட்டு, பயன்பாடு குறித்து அவற்றின் இணையதளங் களில் தகவல்கள் தேடி பின் வாங்கவும். வாங் குவதற்கு முன் லேப் டாப் விற்பனை செய் பவரின் நிறுவனமும் நிலையானதுதானா என்று பார்க்கவும். அல்லது இணைய தளங்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் அத்தாட்சி பெற்ற முகவர்களின் முகவரிகள், அதே நிறுவனங்களின் கிளைகள் பட்டியல் இருக்கும்.
அவற்றை பெற்று தொடர்பு கொண்டு வாங்கலாம்.  லேப் டாப் கம்ப்யூட்டர்களை பெர்சனல் கம்ப்யூட்டர்களை ரிப்பேர் நாம் பழுது பார்ப்பது போல பார்க்க முடியாது. மிக நுண்மையான சாதனமாகும். எனவே ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நீங்களே கையாளும் எண்ணத்தை விட்டுவிட்டு அதற்கான் நிறுவன அலுவலகத்திற்குச் செல்லவும். தகுதி கொண்ட டெக்னீஷியனிடம் மட்டுமே காட்டவும்.

Thursday, August 22, 2013

கம்ப்யூட்டருக்கு புதியவரா? பைல்களின் வகைகள்


.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

.rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும். 


***.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.


***.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட் ஷிட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும். 


.ppt: விண்டோஸின் பிரிமியர் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். 


.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபட் ரீடர் உட்பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது


*******htm / html: ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால், அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.


.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.


சுருக்கப்பட்ட பைல்கள்: கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும் பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச் சுருக்கித் தருவதனை File compression என அழைக்கின்றனர். பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 


.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.


******.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.


.cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.



(நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்)

Friday, January 4, 2013

சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி??



Software Engineers மொத்தம் ரெண்டு வகை, 

காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு ,work pressureனு வீட்ல போய் அம்மா,அப்பா,பொண்டாட்டி கூட சண்ட போட்டுட்டு படுத்து தூங்கறவங்க மொத கோஷ்டி.இவங்க, அவங்களா உழைச்சு , increment வாங்கி , onsite போய், சம்பாரிச்சு, மண்டைல முடி கொ.
..ட்டி, கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருவாங்க.... இவங்களுக்கு நம்ம அட்வைஸ் ஏதும் தேவை இல்ல....

ரெண்டாவது கோஷ்டி:
வேல செய்ய புடிக்காம, கடுப்புல வந்து, ஏனோ தானோன்னு வேல செஞ்சு, increment இல்லாம,onsite இல்லாம, வீட்ல, 'சாப்பாட்ல உப்பு இல்லன்னு' சொன்னா,' PCS/Cunfosys/GTS/JCLல தான வேல செய்யற??' ன்னு நக்கல் பேச்சுக்கு ஆள் ஆகி,தினமும் Managerகிட்ட 'You have to put some extra efforts man'ன்னு பேச்சு வாங்கிட்டு இருக்கற 73% பேரு....


இவங்கல்லாம் கஷ்டப்பட்டு வேல செய்யாமலே முன்னேறரதுக்கு எளிய வழிகள்:

*.காலைல மேனேஜர் office போறதுக்கு முன்னாடி நம்ம போயரனும்,Evening அவர் கெளம்புனதுக்கு அப்புறம் தான் நம்ம கெளம்பனும்(அந்த timeல வேல செய்யனும்கறது முக்கியம் இல்ல....).....

*. 5 mins வேலையா இருந்தாலும், பெருசா build up பண்ணனும்,
For example,
உங்க lead சின்னதா excel sheetla ஒரு fieldla ஏதாவது change பண்ண சொன்னாங்கன்னா, அந்த வேலைய செஞ்சு முடிச்சிட்டு,

Hi Ramesh,

As discussed with you yesterday evening over phone, I have successfully changed 3rd row, 4th column of the 'employee details' excel sheet.
Please find the updated excel sheet in the following folder path,

<<folder path/file name>>

Please reply back for any clarifications

Thank you,
XXXXXXXXXXXXXX,
Software Analyst,
YYYY Consultancy Solutions,
Chennai.

அப்படின்னு 5 நிமிஷ வேலைக்கு 15 நிமிஷம் செலவு பண்ணி மெயில் போடணும்....Team members, module lead, group lead, project manager எல்லார்த்தையும் CCல வெக்கணும்....

* .birthday celebrations, Team outingநா, மூஞ்சில cake பூசறது , photo எடுக்கும்போது கொம்பு வெக்கறது , அப்பப்ப ரெண்டு மூணு மொக்கைய போடறதுன்னு நல்லா 'performance' பண்ணனும்....


*Managera எதிர்த்து பேசவே கூடாது, manager சொன்னா ஒன்னும் ஒன்னும் மூணு....

* தெரியாம கூட , 'தெரியாது' ங்கற வார்த்தைய சொல்லிரவே கூடாது. சுத்தமா தெரியாத ஒரு tool, software அல்லது technology பத்தி manager/lead கேட்டா கூட ,
Its a kind of,Its a sort of, In the sense, usability, modularity, quality, technically speaking , cost cutting, probably, actually இந்த மாதிரி வார்த்தைகள போட்டு, ஒரு statement குடுத்தரனும்...

*.Client visit வந்தா, clientsஓட நல்லா interact பண்ணனும்.
What do you think about Indian culture?,
Which one u like most, Dosa or Chappathi?
What will be the future of Indian Software Engineers?(அங்க Eurozone crisis வந்து, கொஞ்ச நாள்ல அவன் futureருக்கே வழியில்லன்னு தெரிஞ்சிருந்தாலும் பரவால்ல....)
இந்த மாதிரி மொக்கத்தனமான கேள்வியெல்லாம் கேக்கணும்....

*. அப்பப்ப sweets எடுத்துட்டு வரணும்,

Hi All,
Sweets at my desk, Please help yourselves,

அப்டின்னு mail போட்டு எல்லார்த்துக்கும் குடுக்கணும்....இப்படி டகில்பாஸ் வேல செஞ்சாதான் நம்மளோட managerஉக்கு நம்மளோட teamwork தெரியும்.

இது போக அப்பப்ப யாருக்காவது ஏதாவது சொல்லிக்குடுக்கனும் (எல்லார்த்துக்கும் தெரியுற மாதிரி சத்தமா ), Juniorsக்கு அட்வைஸ் பண்ணனும் ,Team movie போனா ticket book பண்ணனும் ,cab book பண்ணனும், Clean shave, formalsனு Raymonds model மாதிரி சுத்தனும்.

இப்படி மேல சொன்ன வேலையெல்லாம் செஞ்சா , Software fieldல முன்னேறி, onsite போயி, சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி, ஊற தாண்டி ஊரப்பாக்கத்துல ஒரு இடம் வாங்கி settle ஆயிறலாம்....

(இணையத்தில் படித்து ரசித்தது)

Tuesday, December 4, 2012

விண்டோஸ் வேகமாக இயங்க


நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) தேவை. 


ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; அது இல்லாமல் இது இல்லை.


உலோகம் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு ஆக்கப்பட்ட உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, டிவி போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை (Instruction) ஒழுங்காகப் பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது (Execute) எனச்சொல்லுவது, ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.

குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற ஒரு புரோகிராம் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு புரோகிராம் எழுதலாம். வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.

நாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.


கம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.
1) உள்ளீடு/வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை

கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை அமைக்கும் இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.

பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.

நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் கட்டளை தருகையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது. 




ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்


எவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:
1) ஒரு பயனாளர் - ஒரு பணி 
(Single User Single task)
2) ஒரு பயனாளர் - பல பணி 
(Single User Multi task)
3) பல் பயனாளர் / பல பணி
(Multy User Multi task)

ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே, அதுவும் ஒரு பணியினை மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத் தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், முதல் பணியை அவர் மூட வேண்டும். பழைய DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். இப்போது இதனை இவ்வகையில் நாம் பயன்படுத்துவதில்லை 

ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே ஆனால் அவர் எவ்வளவு பணிகளை வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பயனாளர்/பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி, விண்டோஸ் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.


விண்டோஸ் வேகமாக இயங்க


விண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுதான். 


தேவையற்றவற்றை இன்ஸ்டால் செய்து வைப்பது, அழிக்க வேண்டிய பெரிய அளவிலான பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் தேங்கவிடுவது, பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்து, இயக்கிப் பின்னணியில் பயன்படுத்தாமல் வைத்திருப்பது என நாம் செய்திடும் பல கம்ப்யூட்டர் பாவச் செயல்களைச் செய்திடலாம். இன்னும் இது போல நாம் தவறான பல வழிகளை மேற்கொள்கிறோமா என்று சிந்தனை செய்தால், பட்டியல் நீளும். அதற்குப் பதிலாக நாம் செய்ய வேண்டியது என்ன என்று எண்ணி, அவற்றில் சில இங்கே பட்டியல் இடப்பட்டுள்ளன.

1. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.


2. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (CCleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.


3. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனை http://www.techrecipes.com /rx/1353 /xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.


4. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும். 


5. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.

6. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

7. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.


8. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.


9. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.


10. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாகவும் ராம் மெமரி பயன்படுத்துவது பாவம். இதனை அதிகரிக்கலாமே!


11. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் “Adjust for best performance” தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.


12. எப்போதாவது விண்டோஸ் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் உங்கள் ஹார்ட் ட்ரைவ் சரியாக பார்ட்டிஷன் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். டிஸ்க்கில் உள்ள பைல்களை அழிக்காமலேயே, ஹார்ட் ட்ரைவ் பார்ட்டிஷன் செய்யக் கூடியபுரோகிராம்கள் நிறைய இணையத்தில் கிடைக்கின்றன.


13. விண்டோஸ் இயக்கத்திற்கான ட்ரைவர் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்திடவும். 


14. கண்ட்ரோல் பேனலைத் திறந்து அதில் Add or Remove என்ற பிரிவைப் பார்த்துப் பயன்படுத்தாத புரோகிராம்களை நீக்கவும்.


15.குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் மவுஸ், கீ போர்டு, சிபியுவில் உள்ள சிறிய மின்விசிறிகள் ஆகியவற்றில் உள்ள தூசு நீக்கிச் சுத்தம் செய்திடவும்.


16. உங்கள் ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்.பி.எம். சுழற்சிக்கும் குறைவான வேகத்தில் செயல்படுவதாக இருந்தால், உடனே குறைந்தது அந்த வேகத்தில் சுழலும் ஹார்ட் டிஸ்க்குக்கு மாறவும்.


17. அவ்வப்போது ஆண்ட்டி வைரஸ் கொண்டு உங்கள் டிஸ்க் முழுவதையும் சோதனை செய்திடவும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இயக்க விருப்பமில்லை எனில், ஆன்லைனில் கிடைக்கும் இலவச புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.


18. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தேவையற்ற டூல்பார்களை நீக்கவும். விஸ்டாவில் சைட் பாரினை பயன்படுத்தவில்லை என்றால் நீக்கலாம். இது தேவையற்ற இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டையும் எடுத்துக் கொள்கிறது.


19. விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. அல்லது நீங்களே உங்கள் ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

20. ஸ்கேன்டிஸ்க் அல்லது செக்டிஸ்க் பயன்படுத்தி உங்கள் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். 

21. உங்கள் கம்ப்யூட்டரில்  சிடி ராம் டிரைவ், யு.எஸ்.பி. போர்ட், ஐ.ஆர். போர்ட், பயர்வயர் போன்றவை தரப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை (எ.கா. பிளாப்பி ட்ரைவ், ஐ.ஆர். போர்ட், பயர்வயர்) நாம் பயன்படுத்துவதே இல்லை. உங்கள் பயாஸ் (bios) செட்டிங்ஸ் சென்று, பயன்படுத்தாதவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்; இதனால் பூட் ஆகும்போது இவை சார்ந்த பைல்கள் லோட் ஆகாமல் இருக்கும். மேலும் இவற்றிற்கு செல்லும் மின்சக்தி மிச்சமாகும்.


22. சிலர் ரீசன்ட் டாகுமெண்ட் லிஸ்ட்டைப் பயன்படுத்த மாட்டார்கள். அவர்கள் இந்த வசதியை எடுத்துவிடலாம். ஏனென்றால் பெரிய லிஸ்ட்டில் இந்த பைல்கள் இடம் பெறுவது கம்ப்யூட்டர் இயக்கத்தினை மந்தப்படுத்தும்.


23.புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுகையில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller) போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும். இவை அந்த புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்கிவிடும்.


24. தற்போது பயன்படுத்தாத பிரிண்டர்கள், மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களுக்கான டிரைவர்களை நீக்கவும். 

25. உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா மிகவும் மெதுவாக இயங்குகிறதா? எந்தவிதத் தயக்கமும் இன்றி   Windows 7க்கு மாறவும். அடுப்பு எதாக இருந்தால் என்ன, சோறு சீக்கிரம் வெந்தால் சரிதானே! லினக்ஸ் அல்லது மேக் சிஸ்டத்திற்கும் கூட மாறலாம்.


இறுதியாக ஒரு பரிந்துரை. எரிச்சல் அடையும் அளவிற்கு, கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்குகிறதா? 


இன்னொரு வழியும் உள்ளது. புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி, அனைத்துமே புதியதாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்களேன்.
(தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » கம்ப்யூட்டர் மலர் செய்தி

Wednesday, November 21, 2012

கம்ப்யூட்டருக்கு புதியவரா? - கம்ப்யூட்டர் கிராஷ்


பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம். 


1. ஹார்ட்வேர் பிரச்னை:

கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம் இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு/மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start>Settings> Control Panel> System> Device Manager எனச் சென்று பார்த்தால்,பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும் 

2. ராம் மெமரி சிப்ஸ்:

ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் தீச்டிt ண்tச்tஞு நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம். 

3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்:

பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் (Defrag)செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.

4. வீடியோ கார்ட்:

சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start>Settings>Control Panel> Display Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.

5. வைரஸ்:

பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். 

6. பிரிண்டர்:

பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும். 

7. சாப்ட்வேர்:

முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

8. அதிக வெப்பம்:

இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப்படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கு வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

9. மின் ஓட்டம்:

கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும  சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கலாம்.

நன்றி :தினமலர் கம்ப்யூட்டர் மலர் செய்தி

Sunday, December 18, 2011

இலவச பி.டி.எப். புரோகிராம்கள்



அடோப்(Adobe) நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் பார்மட் (PDFPortable Document Format)டில் பைல் ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும். இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப். புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஆறு புரோகிராம்களை இங்கு காணலாம். 

பி.டி.எப். பார்மட், பல ஆண்டுகளுக்கு முன்பு, அடோப் (Adobe)நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது. உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப் படுவதற்கு அதன் சிறப்பியல்புகளே காரணம். ஒரிஜினல் டாகுமெண்ட்டின் அனைத்து சிறப்பு இயல்புகள், பார்மட்டிங் அம்சங்கள் அனைத்தும் பி.டி.எப். பார்மட்டிலும் அப்படியே காட்டப்படுகிறது. டெக்ஸ்ட், இமேஜ், மல்ட்டிமீடியா மற்றும் பல அம்சங்கள் பி.டி.எப். பார்மட்டிலும் உயிரோட்டத்துடன் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பாஸ்வேர்ட் கொண்டு ஒரு பி.டி.எப். பைலை பாதுகாக்கலாம். எந்த ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலைக் காண முடியும். இந்த பைல்களைக் காட்டி எடிட் செய்திட வழி தரும் ஆறு இலவச புரோகிராம்களை இங்கு காணலாம்.

1. பி.டி.எப். எடிட் (PDF Edit)
:


 இது ஒரு ஓப்பன் சோர்ஸ் மற்றும் மிகக் குறைவாக இடம் பிடிக்கும் புரோகிராம். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள விஷயங்களை மாற்றி அமைக்கவும், அப்படி அமைத்த மாற்றங்களுடன் பைலை சேவ் செய்திடவும் இந்த புரோகிராம் வழி தருகிறது. இந்த தொழில் நுட்பம் தெரிந்த பயனாளர்கள், இதில் கிடைக்கும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் (GUI Graphical User Interface) வசதியைப் பயன்படுத்தி, பி.டி.எப். ஆப்ஜக்ட்களை யும் மாற்றி அமைக்கலாம். இந்த புரோகிராமினை விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயக்கலாம். இதனைப் பெற http://sourceforge.net/projects/pdfedit என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

2. ஓப்பன் ஆபீஸ் (Open Office): 


பி.டி.எப். எடிட்டிங் புரோகிராம்கள் குறித்துக் காண்கையில் ஓப்பன் ஆபீஸ் புரோகிராமினையும் இணைத்துப் பார்க்கலாம். Writer, Calc, Impress, Draw, Base and Math என இதில் ஆறு வகை வசதிகள் தரப்பட்டுள்ளன. இதில் ரைட்டர் டூல் மூலமாக டாகுமெண்ட்களை உருவாக்கி, பி.டி.எப். பார்மட்டிற்குக் கொண்டு செல்லலாம். இதன் மூலம் பி.டி.எப். பைல் களை எடிட் செய்திட முடியாது. இதில் சில ஆட் ஆன் தொகுப்புகளைக் கொண்டு வந்து மற்ற வசதிகளையும் மேற்கொள்ளலாம்.

இணையத்தில் செயல்படும் எடிட்டர்கள்: சில பி.டி.எப். எடிட்டர்களை இணைய இணைப்பில் இயக்கி, டாகுமெண்ட் களைத் தயார் செய்திடலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

3. பி.டி.எப். வியூ (PDFVue): 


தற்போது சோதனைப் பதிப்பாக நமக்கு இணைய வெளியில் கிடைக்கும் பி.டி.எப். எடிட்டர் இது. இதனை https://docq.com/landing/pdfvue என்னும் முகவரியில் பெறலாம். தற்போது ஒரு பி.டி.எப். டாகுமெண்ட்டை படிப்பது, கமெண்ட் எழுதுவது, குறிப்புகளை இணைப்பது, பக்கங்களை நீக்குவது அல்லது மாற்றுவது, நிரப்ப வேண்டிய டிஜிட்டல் படிவங்களை இணைப்பது போன்ற செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசர்கள் மூலம் இதனை அணுகிப் பெறலாம். பி.டி.எப். டாகுமெண்ட்களை நேரடியாக இந்த தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். இதில் உருவாக்கப்படும் எந்த ஒரு பி.டி.எப். டாகுமெண்ட்டையும் டவுண்லோட் செய்து பிற பி.டி.எப். எடிட்டர்களில் படிக்கலாம். இந்த எடிட்டருடன் கிடைக்கும் deskPDF என்ற புரோகிராம் மூலம், அச்சிடக் கூடிய எந்த ஒரு பைலையும் இதற்கு அப்லோட் செய்து அதனை பி.டி.எப். பைலாக அச்சிட மாற்றலாம்.

4. பி.டி.எப். எஸ்கேப் (PDFescape): 

http://www.pdfescape.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் இந்த புரோகிராமில் ரீடர், எடிட்டர், பில்லர், டிசைனர் மற்றும் அன்னோடேட்டர் (eader, editor, filler, designer, and annotator) ஆகியவை தரப்படுகின்றன. இதன் மூலம் டெக்ஸ்ட், இமேஜ் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை இணைக்கலாம். இங்கு உருவாக்கப்படும் பி.டி.எப். பைல்களை, அனுமதி பெறாதவர்கள் படிக்க இயலாதபடி என்கிரிப்ட் செய்திடலாம்; பாஸ்வேர்ட் கொடுக்கலாம். ஜாவா ஸ்கிரிப்டில் இயங்கும் எந்த பிரவுசர் மூலமாகவும்(எ.கா.Internet Explorer, Firefox, Safari, Chrome மற்றும் Opera) இதனை இணையத்தில் இருந்தபடியே இயக்கலாம்.

5. எக்ஸ்பர்ட் பி.டி.எப். எடிட்டர் (Expert PDF Editor): 


இந்த பி.டி.எப். எடிட்டர் ஏறத்தாழ மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பு போலவே யூசர் இன்டர்பேஸ் கொண்டுள்ளது. இதனால், இதில் இயங்குவது மிக எளிதாகவும் மனதிற்கு நிறைவாகவும் உள்ளது. இதில் பி.டி.எப். டாகுமெண்ட்களை படிக்கலாம், திருத்தலாம் மற்றும் அச்சிடலாம். பி.டி.எப். பைலுடன் அதன் உறுதித் தன்மையை அமைத்திட டிஜிட்டல் சர்டிபிகேட் இணைக்கலாம். பல பைல்களை ஒன்றாக்கலாம்; வெட்டி, ஒட்டி புதிய பைலாக இணைக்கலாம். இதன் எளிய தொகுப்பினை சோதனைத் தொகுப்பாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். கூடுதலாக, மேம்பட்ட வசதிகள் வேண்டும் எனில் கட்டணம் செலுத்திப் பெறலாம். இந்த எடிட்டர் கிடைக்கும் இணைய தள முகவரி: http://www.visagesoft.com /products/pdfeditor


பொதுவாக பி.டி.எப். டாகுமெண்ட்கள் பதிப்பிக்க மற்றும் அச்சிடும் நோக்கங்களுடன் உருவாக்கப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட பி.டி.எப். புரோகிராம்கள் அனைத்துமே இவற்றிற்கும் மேலாக நமக்குப் பணியாற்றுகின்றன. இவற்றிலிருந்து எது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயலாற்றுகிறதோ அதனை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத் தலாம். 


(நன்றி: தினமலர் -கம்ப்யூட்டர் மலர்)

Friday, September 2, 2011

இன்டர்நெட் தோற்றமும் பயன்பாடும்



இன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன

1960ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவின் டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைக் கழகங்களில் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களைப் பகிர்ந்து பயன்படுத்த எண்ணியபோது இன்டர்நெட் உருவானது. இந்த கட்டமைப்பை மக்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது. இந்த கட்டமைப்பு ரஷ்யா 1957ல் ஏவிய ஸ்புட்னிக் சாட்டலைட்டையும் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் ARPA என்னும் நெட்வொர்க் அமைப்பை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிற்காகவும், தகவல் தொழில் நுட்ப தொடர்புகளுக்காகவும் உருவாக்கினார்.
இன்டர்நெட் 90களில் பிரபலமானது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு பரவியது.
5 கோடிப் பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய 13 ஆண்டுகள் ஆனது. இன்டர்நெட் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது.


இன்றைய நவீன உலகில் இன்டர்நெட் பல பயன்களை அளித்த போதும், அவை மற்றொரு இருளான பக்கத்தையும் கொண்டிருக்கின்றன. தினசரி, தாங்கள் வாங்கிய பொருட்களுக்குக் கட்டணம் கட்டுவதிலிருந்து பொழுதுபோக்கிற்காக விளையாடுவது வரை இன்டர்நெட்டில் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றோம் என்பதே தெரியாமல் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.மன அழுத்தத்துக்கும் இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் நெருங்கிய பிணைப்பு இருக்கிறது.

செலவழிக்கும் நேரம் அதிகம் ஆக ஆக மன அழுத்தமும் அதிகமாகிறது. இவர்களில், 18 பேர் ஒரு நாளைக்கு மிக அதிக நேரம் இன்டர்நெட்டில் செலவழிக்கின்றனர். இவர்களை “இன்டர்நெட்டுக்கு அடிமையானவர்கள்’ என்று வகைப்படுத்தலாம்.சாதாரண மக்களை விட இன்டர்நெட்டில் நேரம் அதிகமாக செலவழிப்பவர்களின் மன அழுத்தம் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது

சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன பதை பதைப்பு ஏற்படுகிறது. மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர் களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகி றார்களோ, அதே போலத்தான் இன்டர் நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள் ளனர். இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர், அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார். 

இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் -- ஆகியன வற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இரவு படுக்கப் போகும்போது பேஸ்புக், ட்விட்டர் அப்டேட் செய்து படுக்கைக்குச் செல்வதைப் பழக்கமாகப் பலர் கொண்டு ள்ளனர். எனவே இது தடை படுகையில், தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.
ஆனால், இந்த கணக்கெடுப்பில் 21% பேர், இன்டர்நெட் இல்லை என்றால், ஆஹா! இன்று விடுதலை; சுதந்திரமாக இருப்பேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை கருத்தில் கொண்டு இண்டர்நெட்டை பயன்படுத்துவது அனைவுக்கும் நல்லதுதானே?