Showing posts with label Food. Show all posts
Showing posts with label Food. Show all posts

Tuesday, April 4, 2017

வேர்கடலை கொழுப்பு அல்ல.! ஒரு மூலிகை!!

 Image result for groundnut
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி. 
நார்சத்து- 9 மி.கி. 
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி. 
புரதம்- 25 மி.கி. 
ட்ரிப்டோபான்- 0.24 கி. 
திரியோனின் – 0.85 கி 
ஐசோலூசின் – 0.85 மி.கி. 
லூசின் – 1.625 மி.கி. 
லைசின் – 0.901 கி 
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி 
கிளைசின்- 1.512 கி 
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி 
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி. 
காப்பர் – 11.44 மி.கி. 
இரும்புச்சத்து – 4.58 மி.கி. 
மெக்னீசியம் – 168.00 மி.கி. 
மேங்கனீஸ் – 1.934 மி.கி. 
பாஸ்பரஸ் – 376.00 மி.கி. 
பொட்டாசியம் – 705.00 மி.கி. 
சோடியம் – 18.00 மி.கி. 
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி. 
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம். 
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்:

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது
. 
கொழுப்பை குறைக்கும்: 

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். 

இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. 

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தா ன் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

Tuesday, October 14, 2014

வியக்க வைக்கும் வேர்க்கடலை

உணவே மருந்து :வியக்க வைக்கும் வேர்க்கடலை !

நிலக்கடலை குறித்த மூடநம்பிக்கைகள், அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்டுள்ளன. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம்வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய் பிடிக்கும் பருவத்திற்குப் பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதைக் காணலாம். நிலக்கடலைச் செடியைச் சாப்பிடும் ஆடு, மாடு, நாய் வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

  நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பைசீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நீரழிவு நோயைத் தடுக்கும் :

  நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள்நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப்பைக் கல்லைக் கரைக்கும் :

  நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும் :

  நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகத் திகழ்கிறது.

இளமையைப் பராமரிக்கும் :

  இது இளமையைப் பராமரிக்கப் பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையால் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதைத் தடுப்பதுடன்இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும் :

  நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும் :

  நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பைக் குறைக்கும் :

  ஆம், உண்மைதான். நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. பாதாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கருப்பைக் கோளாறுக்கு முற்றுப்புள்ளி :

  பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்குப்  பெரிதும் தேவையான போலிக்அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,   இரும்பு, விட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன.  பெண்களுக்குக் கருப்பைக்கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.       

பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :

 நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும்நிலக்கடலைக்குத்தான் உண்டு.

நன்றி : இனிய திசைகள்


Monday, August 5, 2013

துரித உணவு (Fast food )

இன்று துரித உணவு ( fast food ) உண்ணுவது பரவலாக உலகெங்கும் வழக்கில் உள்ளது. இதனால் ஒவ்வாமை(Allergy) உண்டாகலாம் என்பது ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தப் பழக்கம் சிறு பிள்ளைகளிடையே அதிகமாகக் காணப்படுகின்றது.
பல வேளைகளில் சிறு பிள்ளைகளின் தோலில் சிவந்த நிறத்தில் பொறிப் பொறியாக தோன்றி அரிப்பை உண்டுபண்ணும். அல்லது அடிக்கடி சளி பிடிக்கும். கண்கள்கூட சிவந்து வீங்கி வலிக்கும். மருத்துவர் இதை ஒவ்வாமை ( allergy ) என்று சொல்லி மருந்து தருவதுண்டு. சிறு பிள்ளைகளுக்கு ஆஸ்த்மா வியாதியும் அதிக அளவில் பெருகி வருகிறது. இதற்குப் பரம்பரை, மரபணு, சுற்றுச் சூழல் தூய்மையின்மை  என்று பல காரணங்கள் கூறினாலும் உண்ணும் உணவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
       சிறு பிள்ளைகளுக்கு பல காரணங்களால் ஒவ்வாமை உண்டாகலாம்.
வயிற்றுப் புழுக்கள் இருப்பது முக்கியக் காரணமாகலாம் .இதனால்தான் 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து தரப்படுகின்றது.
வயிற்றில் புழுக்கள் எப்படி உருவாகின்றன என்பது பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது. பெரும்பாலானவை உணவு நீர் வழிதான் பரவுகின்றன .உணவைக் கையாளும் உணவகச் சிப்பந்தி அல்லது வீட்டு வேலைக்காரி கழிவறைக்குச் சென்றபின் கையைச் சரிவரச் சோப்புப் போட்டுக்  கழுவாமல் திரும்பி உணவு வகைகளைக் கையாளும்போது அதன் வழியாகப் புழுக்களின் முட்டைகள் உண்ணும் குழந்தையின் வயிற்றினுள் செல்கிறது. அங்கு அவை பெருகி குடல் புழுக்களை உருவாக்குகின்றன.
இரத்தத்தைக் குடித்து இரத்த சோகையை உண்டுபண்ணும் கொக்கிப் புழுக்கள் ( hook worms ) நேரடியாகக்  கால்களின் தோல் வழியாகப் புகுந்து இரத்த ஓட்டம் மூலமாகக் குடலுக்குள் சென்று தஞ்சம் புகுகின்றன. இதனால்தான் வெளியில் செல்லும் போது கட்டாயமாகக்  காலணிகள் அணிந்து செல்ல வேண்டும். கிராமப் புறங்களில் அதிகமாக இரத்தச் சோகை உண்டாவது இதனால்தான்.
இவை அனைத்தும் சுகாதாரமற்ற காரணங்களால் ஏற்படுபவை. இதனால் வயிற்றில் உள்ள புழுக்களில் தோலுக்கு ஒவ்வாமை உண்டாகி குழந்தையில் தோல் சிவந்து அரிப்பு உண்டாகலாம்.
அனால் இப்போது இந்த நவநாகரிகக்  காலத்தில் சுகாதாரம் பேணி வாழும் நிலையிலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை எவ்வாறு, எதனால் ஏற்படுகிறது என்பதயும் ஆராய்ந்து வருகின்றனர்.
ஒவ்வாமையின் ஒரு பிரிவாகிய ஆஸ்துமா வியாதி பெருகி வருவதற்கு, சுற்றுச் சூழல் மாசு முக்கிய காரணம் எனலாம். குறிப்பாக நகர்ப்புறங்களில் பெருகிவரும் தொழிற்சாலைகளும் வாகனங்களும் அளவுக்கு அதிகமான புகையையும் இரசாயனத்தையும் வெளியேற்றிச் சுற்றுச் சூழலுக்கு சீர்கேடு விளைவிப்பதோடு குழந்தைகளின் உடல் நலத்தையும் கெடுக்கின்றன. நகர்ப்புறங்களில் குழந்தைகள் அதிக அளவில் ஆஸ்த்மா போன்ற நுரையீரல் வியாதிகளால் பாதிக்கப் படுவது இதனால்தான். இதே ஒவ்வாமையால் தோல் வியாதிகளும்கூட உண்டாகின்றன.
இதுவரை சுகாதாரமற்ற பழக்க வழக்கத்தினாலும், சுற்றுச் சூழல் தூய்மையின்மையினாலும் குழந்தைகளின் தோல்கள் பதிக்கப் படுவதைக் கண்டோம்.
இவை தவிர இன்னொரு அதிர்ச்சியூட்டும் காரணமும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது துரித உணவு ( fast food ).இது நாகரீகத்தின் உச்சம் எனலாம். இந்த அவசர உலகில் உண்பதற்கும்கூட அவசர உணவு எளிதில் விற்பனையாகிறது.
அடிக்கடி இந்தத்  துரித உணவை உட்கொள்ளும் குழந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் ஆஸ்த்மா , ஒவ்வாமை , தோல் அரிப்பு ( eczema ) போன்றவை உண்டாகிறது என்று சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் இதுதான் காரணம் எனில், உலகளாவிய நிலையில் துரித உணவு உண்ணும் நிலை பெருகி வருவதால் ,இது பொது நல ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது..( The findings could have major public health significance owing to the rising consumption of fast foods globally , if they turn out to be causal .)
இதில் பங்குபெற்ற ஆய்வாளர்கள் சிங்கப்பூர், நியூ ஜீலாந்து , இங்கிலாந்து, ஸ்பெயின் , ஆஸ்திரேலியா , ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆய்வின் பெயர், ” பிள்ளைகளுக்கான ஆஸ்த்மா , ஒவ்வாமை பற்றிய சர்வதேச ஆய்வு ” என்பதாகும்.( International Study of Asthma and Allergies in Childhood )
இதில் 13 முதல் 14 வயதுள்ள 319,000 பிள்ளைகளும் , 6 முதல் 7 வயதுள்ள 181,000 பிள்ளைகளும் கலந்துகொண்டனர்.
இவர்களிடம் உணவு பழக்கவழக்கம் பற்றியும், ஒவ்வாமைத் தொடர்புடைய வியாதிகளான ஆஸ்த்மா, , தோலில் சொறி ,சளி, கண்வலி போன்றவை பற்றியும் கேள்விகள் அடங்கிய ஆய்வுத்தாள் தரப்பட்டது. குழந்தைகளுக்கு பெற்றோர் உதவினர்.குறிப்பாக ஒரு வாரத்தில் தின்ற உணவுவைகள், எத்தனை முறை பழங்கள் காய்கறிகள் உண்டனர், எப்போதெல்லாம் ஹேம்பெர்கர் ( hamburgers ) உட்கொண்டனர் என்று கேட்கப்பட்டது. இவ்வாறு ஆய்வு ஒரு வருடம் நடத்தப்பட்டது.
                                  
                                              பழங்கள் காய்கறிகள்                                                                                                                                  
 39 சதவிகித பெரிய பிள்ளைகளுக்கும், 27 சதவிகித சிறு பிள்ளைகளுக்கும் ஆஸ்த்மா அதிகம் காணப்பட்டது. இவர்கள் வாரத்தில் மூன்று முறையாவது ஹேம்பர்கர் , இதர துரித உணவு உட்கொள்பவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்களுக்குத் தோல் அரிப்பும்,சளி, கண்வலியும் அதிகம் காணப்பட்டது.
                                   ஹேம்பெர்கர் ( hamburgers )
இதற்கு மாறாக, வாரத்தில் மூன்று தடவை பழவகைகளை உட்கொண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்த்மா, அரிப்பு, சளி , கண்வலி போன்ற ஒவ்வாமை தொடர்புடையவை 11 முதல் 14 சதவிகிதம் குறைவாகக் காணப்பட்டது.
இதன்மூலமாக பழவகைகள் நிறைந்த உணவுவகைகள் ஒவ்வாமைக்கு எதிரான பாதுகாப்பைத் தருவது தெரிய வந்துள்ளது. ( ( Conversely , diets containing fruits , seemed to be protective against allergic disease ,according to the study .)
துரித உணவுகளில் நிறைசெறிவடைந்த கொழுப்புகள் ( saturated fatty acids ) அதிகம் உள்ளதால், அவை உடலின் எதிர்ப்புச் சக்தியை ( immunity ) பாதிக்கின்றன.
ஆனால் பழவகைகளில் ஊயிர் வளியேற்ற எதிர்ப்பிகள் ( antioxidants ) அதிகம் உள்ளதால் அவை உடலின் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகின்றன.
குழந்தைகளையும் பிள்ளைகளையும் ஆஸ்த்மா, தோலில் சொறி சிரங்குகள் 
இல்லாமலும், அடிக்கடி சளி, கண்வலி போன்ற ஒவ்வாமை வியாதிகள் இல்லாமலும் பதுகாக்கவேண்டியது பெற்றோரின் தலையாய  கடமையாகும். 
இதில் முக்கியமானது துரித உணவு வகைகளைக் குறைத்துக் கொண்டு , காய்கறி, பழவகைகளை அதிகம் உட்கொள்ள ஊக்குவிப்பதாகும். 

Monday, February 18, 2013

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை.




இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா? 

பரோட்டா (Parotta or Paratha) என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது பாக்கிசுத்தான், வங்காளதேசம், நேபாளம்,இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாபோன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் பராட்டாஎன்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்டகோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
( கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.)

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல 

மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்


இதில் சத்துகள் எதுவும் இல்லை 

குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , 
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .