Showing posts with label Tips. Show all posts
Showing posts with label Tips. Show all posts

Tuesday, May 7, 2019

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம் !


Image result for diagnosis of disease

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை  அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.


2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். 
மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..


4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?

நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 
ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.


6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு 
ஏற்பட்டு அருந்துவீர்கள்.


7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.


8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.


9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.


12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.


13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?

ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது.இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும்.  அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.


14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். 
ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.


16. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.


17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.


18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது.உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.
Source:

Wednesday, April 5, 2017

நீங்கள் வெற்றியாளரா... சுய பரிசோதனை செய்ய 12 வழிமுறைகள்!#SuccessTips

வெற்றி

நீங்கள் வெற்றியாளரா, தோல்வியாளரா? இப்படி ஒரு கேள்வியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை. ஏனெனில், எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம். 

ஆனால்,வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசம் உண்டு. குறிப்பாக 12 விஷயங்களில்! அவற்றைத் தெரிந்துகொண்டு, சரியான வழிமுறைகளக் கடைப்பிடித்தாலே போதும். நீங்களும் வெற்றியாளரே! அவை...
1.பிழைகள்:
வெற்றியாளர்: தன் மேலுள்ள தவறை பிறர் சுட்டிக்காட்டும்போது அதனை எதிர்க்க மாட்டார்; ஏற்றுக்கொண்டு அதைச் சரிசெய்துகொள்வதற்கான வழிமுறைகளை யோசிப்பார்.
தோல்வியாளர்: தன் தவறை மற்றவர் மீது சுமத்திவிட்டு, தான் எப்படித் தப்பிக்கலாம் என்று யோசிப்பார். தன்னுடைய தவறைத் திருத்திக்கொள்ள எந்த முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார்.
2.எண்ண ஓட்டம்:
வெற்றியாளர்: இயற்கையாகவே உறுதியான எண்ண ஓட்டத்தைக்கொண்டிருப்பார். தன் உணர்சிகளையும் கருத்துகளையும் நல்லெண்ண அடிப்படையிலேயே சிந்திப்பவர் இவர்.
தோல்வியாளர்: எப்போதும் எதிர்மறை எண்ணங்களோடு வலம் வருபவர் இவர். எந்தப் பிரச்னையையும் எதிர்மறைச் சிந்தனைகளுடனேயே அணுகுவார்.
3.பேச்சு:
வெற்றியாளர்: அடிமட்ட அளவுக்கு இறங்கி, பிறரை இழிவாகப் பேச மாட்டார். புதுப்புது விஷங்களை, சமூகப் பார்வைகளை, அவர்களது கருத்துக்களை திட்டமிட்டு விவாதிப்பார்; கலந்துரையாடுவார்.
தோல்வியாளர்: தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி அல்லது ஏதாவது நிகழ்வுகளைப் பற்றி வீண் பேச்சுப் பேசுபவராக இருப்பார். புரளி பேசுவதையே பொழுதுபோக்காகக்கொண்டு செயல்படுவார்.
4.கருத்துகள்
வெற்றியாளர்: தன்னுடைய கருத்துகளை, வெற்றிகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வார். பிறர் கூறும் அறிவுரைகளை நல்ல எண்ணத்துடன் ஏற்றுக்கொள்வார்.
தோல்வியாளர்: தன்னுடைய வெற்றிகளைக்கூடப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார். பிறரின் அறிவுரைகளை விரும்பவே மாட்டார்.
5.குணம்:
வெற்றியாளர்: தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் நல்ல செயல்களை மதிப்பார்; மனதாரப் பாராட்டுவார். அனைத்துத் தரப்பினரையும் உயர்வாக மதிக்கும் குணம்கொண்டவராக இருப்பார்.
தோல்வியாளர்: வெகு எளிதாக அனைவரையும் குறை கூறிவிடுவார்;அவர்களது வெற்றிகளையும் குறைகளாகவே சித்தரிப்பார்; எப்போதும் மற்றவர்களை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பார்.
6.மன்னிக்கும் மனப்பான்மை:
வெற்றியாளர்: தன்னைக் காயப்படுத்தியவர்களாகவே இருந்தாலும்,அவர்களையும் மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர். அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வார். எதிரியையும் நண்பனைப்போல நேசிக்கும் பக்குவம்கொண்டவர்.
தோல்வியாளர்: தன் மனதை காயப்படுத்தியவர்களை வெறுத்து ஒதுக்குவார். அவர்களை தனது வாழ்கையில் இருந்தே முழுமையாக நீக்குவதற்கான வழிமுறைகளைச் செய்வார்.
7.பொது நலமும் சுயநலமும்:
வெற்றியாளர்: `எல்லாரும் வாழ்வில் வெற்றியடைய வேண்டும்; முன்னேற வேண்டும்’ என்கிற பொதுச் சிந்தனையோடு செயல்படுவார். எப்போதும் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளத் துடிப்பார் அதற்காகவே செயல்படுவார்.
தோல்வியாளர்: தனக்கு உதவியவர்கள்கூட வாழ்க்கையில் முன்னேறக் கூடாது என்கிற சுயநல எண்ணத்தோடு இருப்பார். `நான் மட்டுமே வெற்றி பெற வேண்டும்’ என்கிற எண்ணம் இவருக்கு எப்போதும் தலைதூக்கி இருக்கும்.
8.புகழ்:
வெற்றியாளர்: அடுத்தவர் புகழையும் தன்னுடையதாக நினைத்துக் கொண்டாடுபவர். மற்றவர்களுக்குப் பேரும் புகழும் சென்றடைய வேண்டும் என எண்ணுபவர்.
தோல்வியாளர்: `புகழ் எனக்கு மட்டுமே உரித்தான ஒன்று. அதை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்கிற சுயநலத்தோடு பயணிப்பவர். 
9.ஆபத்தை எதிர்கொள்ளும் விதம்:
வெற்றியாளர்: எந்தப் புது முயற்சியையும் எதிர்கொள்ளத் தயங்காதவர். ஆபத்தைக்கூட ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவார்.
தோல்வியாளர்: புது முயற்சிகளைக் கையாள்வதற்கு அஞ்சுவார். முயற்சி செய்வதற்கு முன்னரே அதில் ஆபத்து வரும் என்று முடிவு செய்து, அதை மேற்கொள்ளாமலேயே கைவிட்டுவிடுவார்.
10.பகிர்தல்:
வெற்றியாளர்: தனக்குத் தோன்றும் கருத்துகளைப் பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லும் இயல்புடையவர். மனதுக்குள் எதையும் மறைத்து வைக்காமல், வெளிப்படையாகப் பேசுபவர்.
தோல்வியாளர்: உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர். எந்த விஷயத்தையும் பிறரிடம் வெளிப்படையாகச் சுட்டிக்காட்ட மாட்டார்.
11.கற்றுக்கொள்ளல்:
வெற்றியாளர்: புதுப்புது விஷயங்களையும், தனக்குத் தெரியாதவற்றையும் கற்றுக்கொண்டே இருப்பார். அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே (Update) இருப்பார். சிறியவர், பெரியவர் என்கிற பேதமின்றி அனைவரிடமும் ஏதாவது ஒன்றைத் தேடிக் கற்றுக்கொள்வார்.
தோல்வியாளர்: `எல்லாம் எனக்குத் தெரியும்’ என்கிற மன நிலையோடு இருப்பார். எந்தப் புது விஷயத்தையும் கற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்.
12.வாழ்க்கைப் பாடங்கள் :
வெற்றியாளர்: அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வைக் கண்டறிந்து, அவற்றை எளிதாகக் கடந்து செல்பவராக இருப்பார். கடந்தபோன நாட்களை அதிகம் யோசிக்க மாட்டார். இன்றைய தினத்தை எப்படி, நல்லபடியாகக் கழிக்க வேண்டும் என்பதை மட்டும் சிந்திப்பார்.
தோல்வியாளர்: கடந்தகால பிரச்னைகளை நினைத்து நினைத்தே இன்றையப் பொழுதையும் பிரச்னைகளுடனேயே கழிப்பார். அந்தப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டறிய முன்வர மாட்டார்.

நீங்கள் வெற்றியாளரா, தோல்வியாளரா? 

சுயபரிசோதனைக்கு உதவும் இந்த 12 வழிமுறைகளையும் எல்லோருமே அசைபோட்டுப் பார்க்கலாம்.

 இந்த வழிமுறைகள் பெரும்பான்மையானவர்களுக்குப் பொருந்தும். இவற்றை சுயபரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் உங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டால் போதும்... நிச்சயம்! நீங்களும் சாதனையாளராக வலம் வர முடியும்...

நன்றி                  
http://www.vikatan.com/news/health/82193-12-steps-to-self-analyze-whether-you-are-a-successful-person.html

Monday, February 8, 2016

குரோம் பிரவுசர்: சில குறிப்புகள்

இணைய உலா வர பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், குரோம் பிரவுசர் முதல் இடம் கொண்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப அதனை வழி அமைத்துக் கொள்ளும் வசதியே இதற்குக் காரணம். மற்றும் இது தரும் பாதுகாப்பு, நம்மை வழி நடத்தும் இடைமுகம், தொடர்ந்து வழங்கப்படும் புதிய வசதிகள் என இதன் தன்மைகள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. 

1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச் செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.

2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.

3. குரோம், அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions/ எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும்.இங்கு “Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.

4. சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். 

5. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும். 

6. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்து பவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.

7. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “-” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.

8. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும். 

9. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt-+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, “Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.

10. எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.

11. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, “On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ““Continue where I left off.”” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்துஇணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.

நன்றி :தினமலர் /கம்ப்யூட்டர் மலர் செய்தி

Sunday, September 21, 2014

எப்போதும் ஜெயிக்க தெரிந்துக்கொள்வோம்.

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-

1.    மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2.    ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3.    உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4.    வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5.    முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6.    விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன்,       மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை,     உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8.    எக்காரணம் கொண்டும் காலை        உணவைத் தவிர்க்காதீர்கள்.

9.    நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10.   புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே     இருக்கட்டும்.

11.   வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.

25. உங்கள் தனிப்பட்ட           நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். 
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

Source: http://www.namadhunambikkai.com/2010/04/01/1094/

Wednesday, July 9, 2014

காணாமல் போகட்டும் கருவளையம்!

Black Circles Under Eyes
செதுக்கி வைத்த சிற்பம் போல முகம்... வசீகரிக்கும் நிறம்... லட்சணமான சிரிப்பு... இப்படி எல்லாம் இருந்தாலும் ஒரு சின்ன விஷயம் இவை  அனைத்தையும் காணாமல் போகச் செய்துவிடும். அதுதான் கண்களுக்கடியில் தோன்றுகிற கருவளையங்கள். ராத்திரி, பகல் பார்க்காமல், தூக்கம்  தவிர்த்து உழைக்கிற வர்களுக்குத்தான் முன்பெல்லாம் கருவளையங்கள் வரும். இன்றோ அது பரவலாக எல்லோருக்கும் வருகிறது. கருவளையங்கள்  தோன்றக் காரணங்கள் என்ன? அதற்கான தீர்வுகள், வராமல் தவிர்க்கும் வழிகள் என எல்லாவற்றையும் பற்றி விவரமாகப் பேசுகிறார்  அரோமாதெரபிஸ்ட்டும் அழகுக்கலை நிபுணருமான கீதா அஷோக்.

கருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மூன்று... ஊட்டச் சத்துக் குறைபாடு, மரபு வழி, ஸ்ட்ரெஸ் மற்றும் கண்களுக்கு அதிக வேலை  கொடுப்பது. காரணத்தைக் கண்டுபிடிக்க ஒரு எளிய டெஸ்ட் உள்ளது. கண்ணாடி முன் நின்று கொண்டு, உங்கள் கண்ணுக்கு அடியிலான பகுதியை  லேசாகக் கீழே இழுத்துப் பாருங்கள். உடம்பு சரியில்லை எனப் போனால் மருத்துவர்கள் உங்கள் கண்களை டெஸ்ட் செய்வார்களே, அதே மாதிரிதான்.  கண்ணுக்குள் பார்க்காமல், கண்ணுக்கடியிலான தோல் பகுதியைப் பாருங்கள்.

அது வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணமாக இருக்கும். அதிலும் குறிப்பாக இரும்புச் சத்தும் ஆக்சிஜனும் குறைவாக  இருக்கும். கருப்பாக இருந்தால், கருவளையத்துக்கு மரபு வழியோ, ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தமோ காரணமாக இருக்கலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு...

ஆரோக்கியம் என நினைத்துக் கொண்டு, வெறுமனே ஓட்ஸாகவோ, கார்ன்ஃப்ளேக்ஸாகவோ சாப்பிடுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு உணவையே தொடர்ந்து  சாப்பிடு கிற போது, உடலுக்குத் தேவையான எல்லா சத்துகளும் கிடைப்பதில்லை. சருமமோ, கூந்தலோ ஆரோக்கியமாக இருக்க, எல்லா சத்துகளும்  அவசியம். முந்தைய காலங்களில் கருவளையப் பிரச்னைகளைப் பற்றியெல்லாம் யாரும் கேள்வியே பட்டிருக்க மாட்டார்கள். காரணம், அவர்களது  சரிவிகித, சத்தான சாப்பாடுதான்!

கருவளையங்கள் இருப்பது தெரிந்ததும் நீங்களாகவே கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி உபயோகிக்க வேண்டாம். எந்த ஒரு க்ரீமும் மேலோட்டமாகவும்  தற்காலிகமாகவும் உங்கள் பிரச்னையை சரி செய்யுமே தவிர, நிரந்தரத் தீர்வைத் தராது. முதல் வேலையாக ரத்தப் பரிசோதனை - அதில்  ஹீமோகுளோபின், இரும்புச்சத்து அளவுகளை தனித் தனியே சரிபார்க்க வேண்டும். சிலருக்கு கருவளையங்களுடன் சேர்ந்து, கண்களுக்கடியில்  சுருக்கங்களும் இருந்தால், அவர்கள் ரத்தத்தில் புரதத்தின் அளவையும் சரிபார்க்க வேண்டும். குறைபாட்டின் அளவு தெரிந்து, அதற்கேற்ப உங்கள்  உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி, உணவு மற்றும் சப்ளிமென்ட் என இரண்டின் மூலமும் சத்துகள் உடலுக்குள்  சேரும்போது, பிரச்னை சீக்கிரமே சரியாகும்.

என்னென்ன உணவுகள் உதவும்?

ப்ளூபெர்ரி, பசலைக்கீரை, பீர்க்கங்காய், சிவப்பு முளைக்கீரை, காளான், உலர்ந்த திராட்சை, பன்னீர் திராட்சை, சப்போட்டா, அவகேடோ, கொய்யா,  கொள்ளு, குதிரைவாலி அரிசி, கருப்பு உளுந்து, ராஜ்மா, ஆட்டீரல், காட்டு சீரகம் (வைல்ட் கியூமின்), சீஸ் - இவை அத்தனையும் கருவளையங்களை  விரட்டும் சக்தி கொண்டவை.

மரபு வழியால் வந்திருந்தால்?

அம்மா, அப்பாவுக்கு கருவளையங்களே இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு இருக்கும். ஆண் குழந்தைகளாக இருந்தால் அவர்களது அப்பா  அல்லது தாய்மாமாவுக்கு கருவளையங்கள் இருந்தாலும், பெண் குழந்தைகளாக இருந்தால் அம்மா அல்லது அத்தைக்கு கருவளையம் இருந்தாலும் அது  மரபு வழியே வரும். பொதுவாக மரபு வழிப் பிரச்னைகளை சரியாக்குவது சிரமம். ஆனாலும், நவீன மருத்துவ முன்னேற்றத்தில் அவற்றுக்கும் தீர்வுகள்  உண்டு.

மரபுவழி கரு வளையம் எனத் தெரிந்தால், ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டறிந்து, சிகிச்சை மற்றும் உணவு முறையின் மூலம் சரி செய்யலாம்.  மேலே சொன்ன உணவுகளை இவர்கள் இன்னும் சற்று அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மரபு வழியில் பிரச்னைகள் இருக்கும் போது,  உணவிலோ, பராமரிப்பிலோ சின்ன அலட்சியம் வந்தாலும், அதுதான் சாக்கு என கருவளையம் எட்டிப் பார்க்கும்.

மன அழுத்தம் மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பதால் வந்தால்...


அளவுக்கதிகமாக டி.வி. பார்ப்பது, புத்தகம் படிப்பது, கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது, இரவு ஷிஃப்ட் என்கிற பெயரில் தூக்க முறையையே மாற்றிக்  கொள்வது போன்றவை கருவளையங்களுக்கு முக்கிய காரணங்கள். எப்போதுமே, அது பகலோ, இரவோ... தூங்கி எழுந்த பிறகு பார்த்தால்  எல்லோருடைய முகமுமே அழகாக இருப்பதை உணரலாம். தூக்கத்தின் போதுதான் உறுப்புகள் ஓய்வெடுப்பதுடன், ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.  மேலே சொன்ன விஷயங்களால் ரத்த ஓட்டம் தடைப்படும். ரத்தக் குழாய்கள் சுருங்கும். அதன் வெளிப்பாடு முடி உதிர்வாகவோ, கண்களுக்கடியிலான  கரு வளையங்களாகவோ தெரியும்.

என்ன செய்யலாம்?

* உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியில் உள்ள ஸ்டார்ச் கருவளையங்களுக்கு மிக நல்ல மருந்து. அவற்றை நறுக்கிய உடனேயே கண்களின் மேல்  வைத்துக் கொண்டால்தான் பலன்.

* உபயோகித்த டீ பைகளை கண்களின் மேல் வைப்பது முழுமையான பலன் தராது. திக்கான டீ டிகாக்ஷனை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.  அதில்  பேப்பர் மாதிரி மெலிதாக வெட்டிய பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டு 5 முதல் 7 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். கிரீன் டீயாக  இருந்தால் இன்னும் சிறப்பு.

* கார்போக அரிசி, கருஞ்சீரகத்தை தலா 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் நன்கு வேக வைக்கவும். அது ஆறியதும் அதில் 10 மி.லி.  சுத்தமான பன்னீர் கலந்து, அப்படியே 3 மணி நேரம் வைக்கவும். பிறகு வடிகட்டி. பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்கவும். உடனடியாக ஒரு  போட்டோ செஷனுக்கு தயாராக வேண்டும், வெளியே பார்ட்டிக்கு போக வேண்டும், கருவளையங்கள் தெரியக்கூடாது என நினைக்கும் போது இந்த  சிகிச்சை இன்ஸ்டன்ட் பலன் தரும்.

* 2 கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 100 மி.லி. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப்  போட்டு, உடனே மூடி வைக்கவும். 24 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது  பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் கூட விரட்டும். அதிக எண்ணெய் பசையை  நீக்கும்.

* பிங்க் நிற தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 10 மி.லி. விளக்கெண்ணெயும், 10 மி.லி. தேனும் கலந்து 7  மணி நேரம் வெளியே வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவவும்.

* முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து, 5 மி.லி. கிளிசரினும் 5 மி.லி.  எலுமிச்சைச் சாறும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.

பார்லரில் என்ன செய்யலாம்?


பைட்டோதெரபி என்ற சிகிச்சை எத்தனை ஆழமான கருவளையங்களையும் போக்கும். கண்களுக்கு உகந்த தாவரங்களின் சாரங்களைக் கொண்டு  செய்யப்படுகிற இந்த சிகிச்சையில் லோட்டஸ், கேமமைல், பெர்கமாட், ஜெரேனியம், யிலாங் யிலாங், சைப்ரஸ், ஃபிரான்கின்சென்ஸ் உள்ளிட்ட  அரோமா ஆயில்களின் கலவை அடங்கியிருக்கின்றன. பொதுவாகவே அரோமா ஆயில்களுக்கு சருமத்தின் 2வது அடுக்கு வரை ஊடுருவும் சக்தி  உண்டு. கருவளையமானது சருமத்தின் 2வது அடுக்கு வரை பரவியிருந்தால், இந்த சிகிச்சை வெறும் இரண்டே நாட்களில் 70 சதவிகித அளவுக்குப்  பலனைக் காட்டும்.

வீட்டில்...
  • கண்களுக்குப் போடுகிற எந்த மேக்கப்பையும் நீக்காமல் தூங்கக் கூடாது.
  • இரவில் கண்களுக்கடியில் தரமான நைட் க்ரீம் தடவிக் கொள்ளலாம்.
  • சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம்.
  • வைட்டமின் சி சத்துள்ள தக்காளி, மாங்காய், கொய்யா, குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகளவில் சேர்க்க வேண்டும். வைட்டமின் சி  சத்து உடலில் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வேறு ஏதேனும் உடல் நலக் கோளாறு காரணமாக கண்களுக்கடியில் கருவளையம்  வராமலிருக்கவும் இது உதவும்.
  • Courtesy: DinakaranDinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran