கொழுப்பு:
இன்றைய நவீன வாழ்க்கை சூழலில், பெரும்பாலானோர், வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று 'வறுத்தது, பொரித்தது’ போன்ற எண்ணெய் உணவுகளை ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். இதனால் உடம்பில் கொழுப்பு அதிகரித்து, எடை கூடி, நடக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இன்று எடையை குறைப்பதற்காக பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.
இப்படி நம் உடலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களின் வாசஸ்தலமாக இருப்பது 'கொலஸ்ட்ரால்’ என்கிற கெட்டக் கொழுப்புதான்.
*நீங்கள் ஒரு கார் வைத்துள்ளீர்கள். அதில் தினம் 2 லிட்டர் பெட்ரோல் ஊற்றுகிறீர்கள். தினம் 1 லிட்டர் பெட்ரோலை வண்டி ஓட்டுவதன் மூலம் செலவு செய்கிறீர்கள். ஆகத் தினம் 1 லிட்டர் பெட்ரோல் மீதி. கார் என்றால் பெட்ரோல் டாங்கின் கொள்ளளவு போக மீதமுள்ள பெட்ரோலை ஏற்காமல் வெளியே தள்ளிவிடும். மனித உடலுக்கு அந்தச் சக்தி இல்லை. மீதமாகும் எரிபொருளை (உணவை எரிப்பதால் கிடைக்கும் எனெர்ஜி) கொழுப்பாக மாற்றி உடலில் சேர்த்து வைக்கும்.
இப்படி உடலில் சேரும் கொழுப்பு நாளாவட்டத்தில் நம் ரத்தக் குழாய்களிலும் சேர்கிறது. அப்போது ரத்தம் உடலுக்குள் எளிதாகச் சென்று வருவது தடுக்கப்பட்டு இதயத்துக்கு ரத்தம் போகாமல் ஹார்ட் அட்டாக் வந்து மரணம் சம்பவிக்கிறது.
இப்படிச் சேரும் கொழுப்பையே கொலஸ்டிரால் என்கிறோம். இதைக் கரைக்க இரு வழிகள் உள்ளன.
மீண்டும் கார், பெட்ரோல் உதாரணத்தை நினைவில் கொள்வோம். பெட்ரோல் டாங்கில் அதிகம் பெட்ரோல் இருந்தால் அதை எப்படிச் செலவு செய்வோம்? கார் ஓட்டி, அதாவது உடல்பயிற்சி.
இன்னொரு வழி குறைவாக உண்பது. அதாவது நாம் தினம் செலவு செய்யும் கலோரியை விடக் குறைவான கலோரிகளை உண்டால் உடல் தான் சேர்த்து வைத்த கொழுப்பிலிருந்து சக்தியை எடுத்துச் செலவு செய்யும். அதாவது கொழுப்பை எப்படிச் சேர்த்து வைத்ததோ அதே போல் எரித்துவிடும்.
மீண்டும் கார், பெட்ரோல் உதாரணத்தை நினைவில் கொள்வோம். பெட்ரோல் டாங்கில் அதிகம் பெட்ரோல் இருந்தால் அதை எப்படிச் செலவு செய்வோம்? கார் ஓட்டி, அதாவது உடல்பயிற்சி.
இன்னொரு வழி குறைவாக உண்பது. அதாவது நாம் தினம் செலவு செய்யும் கலோரியை விடக் குறைவான கலோரிகளை உண்டால் உடல் தான் சேர்த்து வைத்த கொழுப்பிலிருந்து சக்தியை எடுத்துச் செலவு செய்யும். அதாவது கொழுப்பை எப்படிச் சேர்த்து வைத்ததோ அதே போல் எரித்துவிடும்.
நல்ல கொழுப்பு என்றால் என்ன? அதாவது ஒருவகைக் கொழுப்பு உடலில் ஜீரணத்துக்கு உதவுகிறது. இந்த வகைக் கொழுப்பு சோயா பீன் ஆயில், சூரியகாந்தி எண்ணெய், சஃபோலா ஆயில் போன்றவற்றில் காணப்படுகிறது. பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டைகளில் காணப்படுகிறது.
ஆக நாம் செய்யவேண்டியது
1) கெட்ட கொழுப்பு நிறைந்து காணப்படும் பாம் ஆயில், கடலை எண்ணெய், நெய் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். இதற்குப் பதில் சூரியகாந்தி எண்ணெய், சோயா ஆயில் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது ஓரளவு குறையும். நல்ல கொலஸ்டிரால் ஏறும்
2) முட்டை மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும். வெள்ளைக் கருவை உண்ணலாம்.
சிகப்பு மாமிசம் எனச் சொல்லப்படும் ஆட்டுக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்.
அதற்குப் பதில் வெள்ளை மாமிசம் எனச் சொல்லப்படும் சிக்கன், மீன் ஆகியவற்றை உண்ணலாம். சிக்கனிலும் தோலை நீக்கிவிட்டு மாமிசத்தைத் தான் பயன்படுத்த வேண்டும்
அதற்குப் பதில் வெள்ளை மாமிசம் எனச் சொல்லப்படும் சிக்கன், மீன் ஆகியவற்றை உண்ணலாம். சிக்கனிலும் தோலை நீக்கிவிட்டு மாமிசத்தைத் தான் பயன்படுத்த வேண்டும்
3) தினமும் உடல்பயிற்சி செய்தால் நல்ல கொலஸ்டிரால் தானாக ஏறும். தினமும் குறைந்தது மூன்று மைல் (ஐந்து கிமி) நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
4) உணவின் அளவைக் குறைக்க வேண்டும். சூரியகாந்தி எண்ணெயில் பொறித்த வடைதானே என அதில் புகுந்து விளையாட கூடாது. எண்ணெய் பலகாரம், இனிப்புகள் ஆகியவை முழுக்க ஒதுக்கப்படவேண்டும்.
மிகப் போர் அடித்தால் வாரம் ஒரு நாள் ஒரு தடவை வடை, பஜ்ஜி போன்றவற்றை மிதமான அளவில் உண்டுகொள்ளலாம்.
உணவில் காய்கறி, பழம் ஆகியவை அதிக இடம்பெற வேண்டும் (உருளைக் கிழங்கும்,
மிகப் போர் அடித்தால் வாரம் ஒரு நாள் ஒரு தடவை வடை, பஜ்ஜி போன்றவற்றை மிதமான அளவில் உண்டுகொள்ளலாம்.
உணவில் காய்கறி, பழம் ஆகியவை அதிக இடம்பெற வேண்டும் (உருளைக் கிழங்கும்,
வாழைப்பழமும் கூடாது. அதில் கலோரிகள் அதிகம். இவற்றை மிதமாக உண்ணலாம்)
உடல் பயிற்சி செய்ய முடியாது என சொல்பவர்கள் கூட வாழ்வில் சிறு, சிறு மாற்றங்களை கொண்டு வந்தால் கணிசமான அளவில் முன்னேற்றம் காணலாம். உதாரணமாக
1) காபியில் தினம் 3 ஸ்பூன் சர்க்கரை போட்டு தினம் மூன்று காபி குடிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அதில் 3 ஸ்பூனுக்குப் பதில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டுக் கொண்டால் சுவையில் பெரிதாக வித்தியாசம் இருக்காது. ஆனால் ஆறு மாதத்தில் அதனால் சுமார் அரை கிலோ எடை குறையும்.
2) 8% கொழுப்பு இருக்கும் பாலை வாங்குவதுக்குப் பதில் 2% கொழுப்பு உள்ள பாலை வாங்கினால் பெரிதாகச் சுவையில் வித்தியாசம் இருக்காது. ஆனால் தினம் ஒரு கப் பால் என வைத்துகொன்டால் அதனால் இரண்டு மாதத்தில் ஒரு கிலோ எடை குறையும்.
3) ஆபிசில் லிப்டைப் பயன்படுத்துவதுக்குப் பதில் படியைப் பயன்படுத்தலாம். கொஞ்சம் சிரமம் ஆனால் முடியாதது அல்ல. தினம் 3 நிமிடம் படியில் ஏறி இறங்கினீர்கள் என வைத்துப் கொன்டால் ஒரு வருடத்தில் சுமார் ஒரு கிலோ எடை குறையும்.
ஆக இப்படிச் சின்னச் சின்ன மாற்றங்கள் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே ஒரே வருடத்தில் நாலைந்து கிலோ எடை குறையும்.
40 நிமிட உடல்பயிற்சி
உடல்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள்
குறைந்தது 40 நிமிடம் நடந்தால் என்ன விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன என்பது பற்றிய விளக்கம்
மூளை:
நாம் உடல்பயிற்சி செய்யத் துவங்கியவுடன் மூளை உடலின் அனைத்துப்பாகங்களுக்கும் அலெர்ட் சிக்னலை அனுப்புகிறது. உடனே அதிக ஆக்சிஜன் சுவாசிக்கத் துவங்குகிறோம். இதயத் துடிப்பு விரைவடைகிறது. வியர்க்கத்துவங்கியவுடன் மூளை உடலில் ஏற்படும் களைப்பைப் போக்க என்டார்பின்களையும்,டொபொமைன்களையும் ரிலீஸ் செய்கிறது. இது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஹேப்பி கெமிக்கல். நமக்கு மகிழ்ச்சியான மூடை வரவழைத்து உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது
இதயம்
உடல்பயிற்சி செய்யத் துவங்கிய அடுத்த வினாடியே நம் இதயம் விரைவாகத் துடிக்கத் துவங்குகிறது. ஒவ்வொரு துடிப்பிலும் அதிக ரத்தம் பம்ப் செய்யபடுகிறது.மிக அதிக வேகத்தில் ஓடினால் நிமிடத்துக்கு 160 - 180 வரை இதயத் துடிப்பு உயர்கிறது (சராசரி 60 - 80 நிமிடத்துக்கு). உடல்பயிற்சி செய்கையில் இதயத்துடிப்பு உயர்வதால் நார்மலாக இருக்கையில் துடிக்க வேண்டிய விகிதம் குறைந்து இதயத்துக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது.
நுரையீரல்
நடக்கையில்/ ஓடுகையில் நுரையீரல் அதிகமான வேகத்தில் மூச்சு வாங்குகிறது.இதனால் உடலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. உடலுக்கு எத்தனை அதிகமாக ஆக்சிஜன் கிடைக்கிறகோ அத்தனை அதிக அளவில் உடலில் இருக்கும் அசுத்தப் பொருளான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படும்
கொழுப்பு செல்கள்
நீன்ட நேரம் மெதுவாக நடந்தால் உடல் கார்போஹைட்ரே(ட்ஸை எரிப்பதை நிறுத்தி உடலில் உள் கொழுப்பு சத்தை எரிக்க துவங்குகிறது.
உடல்பயிற்சி செய்யத் துவங்கிய முதல் 20 நிமிடம் கார்போஹைட்ரேட்டுகளை உடல் எரிக்கும். அதன் பின் 21 ஆவது நிமிடத்தில் இருந்து நீங்கள் உடல்பயிற்சி செய்யும் ஒவ்வொரு வினாடியும் உடல் கொழுப்பைத் தான் எரிக்கும். கொழுப்பை எரிக்க எரிபொருளானஆக்சிஜன் அதிகம் தேவை. அதனால் ஒரு அரைமணிநேரம் நடந்தபின்னர் அதிகம் மூச்சு வாங்குவதை உணரலாம். அது உங்கள் உடல் கொழுப்பை எரிக்கிறது என்பதற்கான அறிகுறி.
அதனால் 20 நிமிடத்தைத் தாண்டியபின்னர் நிறுத்தாமல் எத்தனை நேரம் தொடர்ந்து நடக்க முடியுமோ அதைத் தொடருங்கள்.*
(*நன்றி செல்வன் )
No comments:
Post a Comment