தயிர் ஒரு பால் அல்லது பால் பண்ணை குறித்த உற்பத்திப்பொருள் (dairy product) ஆகும், பாலில் நுண்ணுயிர்கள் நொதித்தல் காரணமாக கிடைக்கும் பொருளாகும். லேக்டோசினை (lactose) நொதிக்கும் போது லாக்ட்டிக் அமிலம் கிடைக்கிறது, அது பாலின் புரதத்துடன் செயல்புரியும் போது தயிருக்கு அதனுடைய இழை நய அமைப்பு (texture) மற்றும் அதன் சிறப்பியல்பு கொண்ட புளித்த ருசியை அளிக்கின்றது.
சோயா தயிரானது, பால்பண்ணை அல்லாத பதிலீடு, சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
குறைந்தது கடந்த 5,400 ஆண்டுகளாக, மக்கள் தயிரை தயாரித்தும் உண்டும் -- வந்திருக்கின்றனர். இன்று அது உலகம் முழுவதும் கிடைக்கும் ஒரு பொதுவான உணவாகும். இது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல் நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்ட உணவாகவும்; புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துகள் கொண்டதாகவும் திகழ்கிறது.
தயிர் அருமருந்து
சிலருக்குத் தயிரைக் கண்டாலே பிடிக்காது. சிலருக்குத் தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. தயிர் ஒரு அருமருந்து. உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. பால் , சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் ஜீரணப்பட்டிருக்கும்.
தயிரில் உள்ள லாக்டோபேசில் என்ற என்சைம் ஜீரண சக்தியைத் தூண்டி வயிற்றுக் கோளாறுகளைச் சரி செய்கிறது. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றைச் சாப்பிட டாக்டர்கள் சொல்வது இதனால்தான். அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது வெந்தயத்துடன் தயிர் ஒரு கப் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல் அடங்கும்.
பிரியாணி போன்ற உடலுக்குச் சூடுதரும் உணவு வகைகளைச் சாப்பிடும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் வெங்காயம் சாப்பிடுகிறோம்.
மெனோபாஸ் எட்டப் போகும் பெண்களுக்குத் தயிர் மிகவும் தேவையானது உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தைத் தயிர் வழங்குகிறது. தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்துகளும் அடங்கியுள்ளன.
கால்சியமும், ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி-யும் தயிரிலிருந்தே பெறப்படுகின்றன. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்கும். சூரிய ஒளியால் பாதிக்கப் படும் நரம்புகளையும், தோல்பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்குத் தயிர்தான் சிறந்த மருந்து. குடல்வால் மற்றும் வயிற்றுப்போக்குக்கு காரணமான கிருமிகள் தயிர், மோரில் உள்ள லாக்டிக் அமிலத்தால் விரட்டியடிக்கப்படும். மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவாகும்.
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடல் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு அருந்தி இதைக் குணப்படுத்தலாம். சில தோல்வியாதிகளுக்கு மோரில் நனைத்த துணியைப் பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கும் மோர்க்கட்டு சிறந்த மருந்தாகும்.
தயிரைச் சோற்றுடன் கலந்து சாப்பிடப்பிடிக்காதவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸியாக குடிக்கலாம். பன்னீர் கட்டிகளாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை அதிகம் சேர்த்துக் கொண்டால் கொழுப்புச் சத்தை அதிகப்படுத்தும். மோராகக் கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராகச் சாப்பிடும் போது தயிரைத் தவற விட்டுவிடாதீர்கள்.
உடல் எடையை குறைக்கும் தயிர் - எப்படி?
தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் அதிக அளவு தயிர் சேர்த்துக்கொள்ளக் கூடாது.
யாரெல்லாம் மோர் சாப்பிடலாம்?
100 மி.லி. மோரில் வெறும் 15 கலோரிதான் கிடைக்கிறது. ஆனால், இதில் நிறைய சத்துகள் இருப்பதால், எல்லோரும் மோர் அருந்தவேண்டியது அவசியம். எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் மோர் குடிக்கலாம்.
தினமும் மோர் குடிப்பது உடலுக்கு நல்லது. அதிக எடையால் பாதிக்கப்பட்டவர்கள் மோர் அதிகளவு குடிக்கவேண்டும். மோருடன் இஞ்சி, வெந்தயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து அருந்துவது இன்னும் நல்லது.
மோர் உடல் வெப்பத்தைக் குறைக்கும். சளி பிடித்திருப்பவர்கள் மோரை மிதமான சூடு செய்து குடிக்கலாம். பெப்டிக் அல்சர் வராமல் தடுக்க, பித்தப்பை மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தவிர்க்க தினமும் மோர் அருந்துவது அவசியம்.
- See more at: http://www.yarlminnal.com/?p=49278#sthash.7vM0V0CZ.dpuf
புரை ஊற்ற மோர் இல்லையா?
பாலில் புரை ஊற்றுவதற்கு மோர் அல்லது தயிர் இல்லையா? கவலையை விடுங்கள் 4 காய்ந்த மிளகாய்க் காம்புகளைப் பாலில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்த நாள் அந்தப் பால் நன்கு தோய்ந்து தயிர் ஆக மாறி இருக்கும்.
No comments:
Post a Comment