பள்ளிப்பருவத்தில் பழகிய நட்பு
பள்ளி முடிந்ததும் மறைந்தது

கல்லூரியில் கிடைத்த நட்பு
கற்ற பின் காற்றில் கரைந்தது
ஓயாது உழைத்த அலுவலக நட்பும்
ஒய்வு பெற்ற பின் ஒளிந்தது
(ஆனால்)

இணையத்தளத்தில் இணைந்த நட்பே
இன்று நிலைத்து நிற்கிறது
பார்த்ததில்லை
பழகியதில்லை
நாம் ஒருவரை ஒருவர்
பாசப் பறவைகளை
இணைந்தோம்
இணையதளத்தால்


இருப்பது வெவ்வேறு நாட்டில்
இடைவெளி குறைந்தது
இணையதளத்தால்

மறைந்தது சாதி,மத,மொழி வேற்றுமைகள்
நிறைந்தது நெஞ்சின் ஒற்றுமைகள்
இணையதளம் தந்த நட்பே
நிலைத்து நிலைத்து நிற்கிறது நம் வாழ்வில்
இது கற்பனைக்கவிதை அல்ல
என் வாழ்வில் நான் கண்ட உண்மை
நட்புடன்
சாயி பாபா
No comments:
Post a Comment