Friday, April 22, 2011

இன்று நேற்று வந்ததல்ல காதல்


இன்று நேற்று வந்ததல்ல காதல்
தொன்று தொட்டு வருவது

அன்று ஆதாம் ஏவாள் தொடங்கி
இன்றும் தொடரும் நிகழ்ச்சி அது

வாடா மலர் போன்ற காதல் பற்றி
பாடா கவிஞன் இல்லை
பலவகை உண்டு காதலில்
சங்ககால தலைவன் தலைவி காதல்
வெள்ளித்திரையில் வண்ணமிகு காதல்
கல்லூரிக்காலத்தில் தோன்றிய முதற் காதல்
தோல்வியில் முடியும் ஒருதலை காதல்
மரணத்தில் முடியும் கள்ளக்காதல்
பார்க்காமலே வரும் ஆன்லைன காதல்

காதலில் வென்றால் மணத்தில் முடியும்'
காதலில் தோற்றால் கவிதையில் முடியும்

காதல் என்பது இருவருக்கு இனிப்பு.,
காதலர்களின் பெற்றோருக்கு கசப்பு.

மகுடி முன் மயங்காத பாம்பும் இல்லை.,
காதல் முன் மயங்காத மனிதரும் இல்லை.

காதல் படுத்தும் பாடு பெரும்பாடு
காதல் கொண்டவர்க்கு
தெரிவதில்லை சாதி,மத வேறுபாடு
புரிவதில்லை வயது வித்தியாசம்
அறிவதில்லை ஏழை பணக்கார பாகுபாடு
வருவதில்லை இரவில் தூக்கம்
இருப்பதில்லை ஓரிடத்தில் நிலையாய்

காதலித்தவரையே கைபிடிப்போரும் உண்டு
கைபிடித்தவரையே காதலிப்போரும் உண்டு

காதல் செய்யும் கோளாறுகள் பல.,
ஒருத்தரைக் காதலித்து மற்றவரைக்.,
கைப்பிடிப்போரும் உண்டு.
ஒருத்தரைக் கைப்பிடித்து மற்றவரைக்.,
காதலிப்போரும் உண்டு.

காதல் என்றும் புனிதமானது.,
காதல் என்றும் புதுமையானது.,
காதல் என்றும் தொடர்வது எனவே.,
காதல் வாழ்க..!
காதல் செய்வோர் வளர்க..!


No comments:

Post a Comment