Friday, March 22, 2013

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?


சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாகபார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.


எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களைஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன.தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம்நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள்நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம்ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும்குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில்பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
    வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாகபடிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்கள் விவரம்:

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.


கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.


விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.


ஷரத்து: பிரிவு.


இலாகா: துறை.


கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.


வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தைஅறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.


புல எண்: நில அளவை எண்.


இறங்குரிமை: வாரிசுரிமை.


தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.


ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.


அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.


சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.


புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.


குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

Saturday, March 9, 2013

மகா சிவராத்திரியும் சிவ வழிபாடும்


“சிவம்” என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். கோபக்காரர், அழிப்பவர், துடைப்பவர் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய(பாவம்), பொய் என்று நாம் உணர வேண்டும்

மாசிமாதம் அமாவாசைக்கு முன்னாள்(சதுர்த்தசி திதி) சிவராத்திரி எனக் கொள்ளப்படுகின்றது. சிவபெருமானார் வழிபாட்டிற்கு உரிய இரவு என்பது பொருளாகும். ஏன் இந்த நாளைச் சிவராத்திரி என்கிறோம் என்று சிந்திப்போம்.

திருமாலும் பிரமனும் தாமே உயர்ந்தவர்கள் என்று சண்டையிட்டுக் கொண்டார்கள். இவர்களது ஆணவத்தை போக்குவதற்காக, அன்பே வடிவான சிவபரம்பொருள் அவ்விருவருக்கும் இடையே, அடியும் முடியும் காணமுடியாத சிவசோதியாய் – பேரொளிப் பிழம்பாய் (நின்றார்) தோன்றினார். அந்த நாள்தான் சிவராத்திரி எனப்படுகின்றது.
"மகா சிவராத்திரியும் சிவ வழிபாடும்"
நன்றி: சிவத்திரு ஆ.பக்தவச்சலம், ஆசிரியர், தமிழ் வேதம் மாத இதழ்
“சிவம்” என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். கோபக்காரர், அழிப்பவர், துடைப்பவர் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய(பாவம்), பொய் என்று நாம் உணர வேண்டும்
மாசிமாதம் அமாவாசைக்கு முன்னாள்(சதுர்த்தசி திதி) சிவராத்திரி எனக் கொள்ளப்படுகின்றது. சிவபெருமானார் வழிபாட்டிற்கு உரிய இரவு என்பது பொருளாகும். ஏன் இந்த நாளைச் சிவராத்திரி என்கிறோம் என்று சிந்திப்போம்.
திருமாலும் பிரமனும் தாமே உயர்ந்தவர்கள் என்று சண்டையிட்டுக் கொண்டார்கள். இவர்களது ஆணவத்தை போக்குவதற்காக, அன்பே வடிவான சிவபரம்பொருள் அவ்விருவருக்கும் இடையே, அடியும் முடியும் காணமுடியாத சிவசோதியாய் – பேரொளிப் பிழம்பாய் (நின்றார்) தோன்றினார். அந்த நாள்தான் சிவராத்திரி எனப்படுகின்றது.
அக்காலம் மாசிமாதம், அமாவாசைக்கு முன்நாள் ( சதுர்த்தசி திதி) திங்கட்கிழமை, திருவோண நட்சத்திரம் கூடிய மேலான புண்ணிய காலம்.
அப்படி பேரொளிப் பிழம்பாய்ப் பரம்பொருள் எழுந்தருளிய காலம், இரவு 11.30 மணிக்கு மேல் 1.00 மணி வரையிலான காலமாகும்.
சிவராத்திரி விரதம் இருத்தல் என்பார்கள். வடமொழியில் இதனை உபவாசமிருத்தல் என்பார்கள். உப என்றால் சமீபம்; வாசம் என்றால் வசித்தல். அதாவது, உபவாசம் – விரதம் எனும் சொல்லிற்குச் சமீபத்தில் வசித்தல் என்பது பொருளாகும். சிவராத்திரி நாள் முழுவதும் நாம் சிவபெருமானுக்குச் சமீபத்தில் இருக்கவேண்டும் என்பது பொருளாகும். அன்று முழுவதும் நமது மனம் இறைச் சிந்தனையிலேயே இருக்க வேண்டும். மனம், மொழி, மெய்(உடம்பு) இம்மூன்றும் சிவராத்திரி நாளன்று சிவத்திடமே இருக்க வேண்டும். நிறைய உணவு உட்கொண்டால் மனம் சிவச்சிந்தனையில் மூழ்காது, தூக்கம் வரும்; உலகியலில் செல்லும். எனவே, சிவராத்திரி அன்று பகலில் பால், பழம் இவை உண்டும், இரவில் உறக்கம் வராமல் இருக்க உணவு உண்ணாமலிருந்தும், சிவ வழிபாட்டினைச் செய்தல் நலம்.
அன்று இரவு முழுவதும் கண் விழித்துச் சிவசிந்தனையுடன் இருக்க வேண்டும். சிவாலயம் வலம் வருதல், திருமுறைகளை ஓதுதல், திருஐந்தெழுத்தினைச் (சிவாயநம) செபித்தல், கூட்டு வழிபாடு செய்தல் ஆகியவற்றால், அன்று இரவை கழித்தல் நலம். இந்த ஒருநாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூசை செய்த பலனை அளிக்கும் என்பது அருளாளர்கள் அனுபத்தால் கூறியுள்ள உண்மையாகும்.
சிறிய வழிபாட்டினால் பெரிதும் மகிழ்ச்சி அடைபவர் சிவபெருமானார். அதிலும் சிவராத்திரி போன்ற புண்ணிய நாட்களில் வழிபடுதல் அளவிளா நன்மைகள் அளிக்கும்.
எல்லா உயிர்களும் ஒடுங்கும் கற்ப முடிவின் இரவில் நான்கு யாமத்தும் உமை அம்மையார் சிவபெருமானாரை விதிப்படி பூசித்து மகிழ்ந்த இரவே சிவராத்திரி என வழங்கப் பெறுகின்றது. இந்நாளில் வழிபடுகின்ற அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் அருள வேண்டும் என்று இறைவி வேண்ட, இறைவரும் அவ்வாறே அருள் புரிந்து, காத்தருள் புரிவதாகத் திருவாய் மலர்ந்தருளினார்.
அக்காலம் மாசிமாதம், அமாவாசைக்கு முன்நாள் ( சதுர்த்தசி திதி) திங்கட்கிழமை, திருவோண நட்சத்திரம் கூடிய மேலான புண்ணிய காலம்.

அப்படி பேரொளிப் பிழம்பாய்ப் பரம்பொருள் எழுந்தருளிய காலம், இரவு 11.30 மணிக்கு மேல் 1.00 மணி வரையிலான காலமாகும்.

சிவராத்திரி விரதம் இருத்தல் என்பார்கள். வடமொழியில் இதனை உபவாசமிருத்தல் என்பார்கள். உப என்றால் சமீபம்; வாசம் என்றால் வசித்தல். அதாவது, உபவாசம் – விரதம் எனும் சொல்லிற்குச் சமீபத்தில் வசித்தல் என்பது பொருளாகும். 
சிவராத்திரி நாள் முழுவதும் நாம் சிவபெருமானுக்குச் சமீபத்தில் இருக்கவேண்டும் என்பது பொருளாகும். அன்று முழுவதும் நமது மனம் இறைச் சிந்தனையிலேயே இருக்க வேண்டும். மனம், மொழி, மெய்(உடம்பு) இம்மூன்றும் சிவராத்திரி நாளன்று சிவத்திடமே இருக்க வேண்டும். நிறைய உணவு உட்கொண்டால் மனம் சிவச்சிந்தனையில் மூழ்காது, தூக்கம் வரும்; உலகியலில் செல்லும். எனவே, சிவராத்திரி அன்று பகலில் பால், பழம் இவை உண்டும், இரவில் உறக்கம் வராமல் இருக்க உணவு உண்ணாமலிருந்தும், சிவ வழிபாட்டினைச் செய்தல் நலம்.

அன்று இரவு முழுவதும் கண் விழித்துச் சிவசிந்தனையுடன் இருக்க வேண்டும். சிவாலயம் வலம் வருதல், திருமுறைகளை ஓதுதல், திருஐந்தெழுத்தினைச் (சிவாயநம) செபித்தல், கூட்டு வழிபாடு செய்தல் ஆகியவற்றால், அன்று இரவை கழித்தல் நலம். 
இந்த ஒருநாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூசை செய்த பலனை அளிக்கும் என்பது அருளாளர்கள் அனுபத்தால் கூறியுள்ள உண்மையாகும்.

சிறிய வழிபாட்டினால் பெரிதும் மகிழ்ச்சி அடைபவர் சிவபெருமானார். அதிலும் சிவராத்திரி போன்ற புண்ணிய நாட்களில் வழிபடுதல் அளவிளா நன்மைகள் அளிக்கும்.
எல்லா உயிர்களும் ஒடுங்கும் கற்ப முடிவின் இரவில் நான்கு யாமத்தும் உமை அம்மையார் சிவபெருமானாரை விதிப்படி பூசித்து மகிழ்ந்த இரவே சிவராத்திரி என வழங்கப் பெறுகின்றது. 
இந்நாளில் வழிபடுகின்ற அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் அருள வேண்டும் என்று இறைவி வேண்ட, இறைவரும் அவ்வாறே அருள் புரிந்து, காத்தருள் புரிவதாகத் திருவாய் மலர்ந்தருளினார்.