Monday, January 14, 2013

பொங்கல் திருவிழா

படிமம்:Preparation of Pongal.jpg

தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடுஇலங்கை,மலேசியாசிங்கப்பூர்ஐரோப்பிய நாடுகள்வட அமெரிக்காதென் ஆப்பிரிக்காமொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.


நான்கு நாள் திருவிழா
பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.

[தொகு]போகி  

  மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.


  • போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

தைப்பொங்கல்

தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம்இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டுமுற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலைவாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். 
இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர். 
மாட்டுப் பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு.
 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.


காணும் பொங்கல்

இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.


Source:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D


பொங்கல் வாழ்த்துக்கள் 




பொங்கலுக்கு ஸ்பெஷலே சர்க்கரை பொங்கல்
வாங்க… தித்திக்கும் சர்க்கரை பொங்கல் செய்து பழகலாம்..!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கிலோ
பாசிப்பருப்பு – 50 கிராம் (ஊற வைத்து கழுவியது)
பால் – 3/4 லிட்டர்
முந்திரி – 10
உலர் திராட்சை – 10
வெல்லம் – 600 கிராம் (பொடி செய்து கொள்ளவும்)
நெய் – 150 கிராம்
பச்சை கற்பூரம் – 1 சிறிய கட்டி (பொடி செய்து கொள்ளவும்)
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, பின் கழுவிய நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும்.
பாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு, நன்கு கிளற வேண்டும்.
அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசியானது வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் சற்று தாராளமாக நெய் ஊற்றி பிரட்டி, பின் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளற வேண்டும்.
வெல்லம் கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு ஒரு முறை கிளறி இறக்கி விட வேண்டும்.
sweet pongal
இப்போது சுவையான சர்க்கரைப் பொங்கல் ரெடி!!!
குறிப்பு : பொங்கலை மண்பானையில் செய்தால், அதன் சுவைக்கு அளவே இருக்காது. எனவே முடிந்தவரை மண்பானையில் செய்யவும்.
சுவையான வெண் பொங்கல்:
தேவையான பொருட்கள் பொன்னி அரிசி – கால்கிலோ பாசிப்பருப்பு பருப்பு – 100 கிராம் இஞ்சி, பூண்டு நறுக்கியது – 2 டீ ஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை சீரகம் - 1 டீ ஸ்பூன் மிளகு - 1 டீ ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது முந்திரிப்பருப்பு - 10 உப்பு – தேவைக்கேற்ப வெண்பொங்கல் செய்முறை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும். நன்றாகக் கழுவி விட்டு மூன்று மடங்கு தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை குழைய வேகவிடவும். குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும். ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டவும். நன்றாக கிளறினால் சுவையான பொங்கல் தயார்.
தமிழ் சினிமாவில் பொங்கல் கொண்டாட்டம் :



[தொகு]

No comments:

Post a Comment