Friday, April 22, 2011

முதற் கவிதை

"இது எனது முதற் கவிதை
கவிதைதானா என்று தெரியாது
கவிதை இலக்கணமும் இருக்காது
படித்து உங்கள் கருத்துக்களை கூறவும்"


கல்வியும் செல்வமும்

உண்ண உணவில்லை
உடுக்க உடையில்லை
பள்ளி செல்ல வழிஇல்லை ஆனால்
படிப்பதற்கோ மனமுண்டு

சின்னஞ் சிறு வயதில் செய்வதோ
பெருந் தொழில்
பாவம் என்ன செய்தனர் இப்
பச்சிளம் பாலகர்கள்

செல்வந்தர் வீட்டு பிள்ளையோ
செலவு செய்ய பெரும் பணம்
உடுப்பதற்கும் உணவிற்கும் குறையில்லை
படிப்பதற்கும் அறிவில்லை இங்கே

கல்வி இருக்கும் இடத்தில செல்வம் இல்லை
செல்வம் இருக்கும் இடத்தில கல்வி இல்லை
இரண்டும் ஓரிடத்தில் இருக்க வழி உண்டா
சிந்திப்பீர் செயல் படுவீர்!

No comments:

Post a Comment