Sunday, April 24, 2011

கடி ஜோக்ஸ் - படி(கடி)த்ததில் பிடித்தது


இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது:

எல்லாரும் ஏன் கம்ப்யூட்டர் படிப்புப் படிக்க ஆசைப்படுறாங்க?

அதுக்குத்தானே 'மவுசு' இருக்கு
.

பஸ் நிலையத்தில் கண்டக்டரும் பயணியும் பேசிக்கொண்டது;

மிஸ்டர். பார்த்தால் படிச்சவராட்டம் இருக்கீங்க..
பஸ்ல டிக்கெட் எடுக்காம உட்கார்ந்திருக்கீங்களே!

ஓஹோ. அப்படின்னா படிச்சவங்க மட்டும் டிக்கெட் எடுத்தால் போதுமா..
என் பொண்டாட்டி ஸ்கூல் பக்கமே போனதில்லை...
அதனால எனக்கு மட்டும் ஒரு டிக்கெட் குடுங்க சார்.



அம்மாவும் குழந்தையும் பேசிக் கொண்டது;

பிஸ்கட் கேட்பியா?

கேட்க மாட்டேன்மா.

சாக்லேட் கேப்பியா?

கேட்க மாட்டேன்மா.

அப்ப சரி!!! சொன்ன பேச்சை கேட்பியா?

கேட்க மாட்டேன்மா.

?????????????


இருபெண்கள் பேசிக்கொண்டது;

என்னோட கணவர் கல்யாணமான புதிசிலே என்னை
தேவயானி, தேவயானின்னு பிரியமா கொஞ்சுவாரு.............

இப்ப என்ன ஆச்சு?

தேவையா நீ. தேவையா நீ ன்னு எரிஞ்சி விழுறாரு




கல்லூரி மாணவிகள் பேசிக் கொண்டது;

நம்ம சுதா போன அமாவாசை அன்னிக்கு
கிரிவலம் போய்க்கிட்டிருந்தாப்பா.

என்னது கிரிவலமா....அமாவாசை அன்னிக்கா?
பெளர்ணமிக்குத்தானே கிரிவலம் போவாங்க?


ஏய்.......... சுத்த மக்குப்பா நீ! அவ தன்னோட பாய் ஃபிரண்ட்
கிரியோட ஊர் சுத்திக்கிட்டிருந்ததைத் தான்
அப்பிடிச் சொன்னேன்!




கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;

இன்னிக்கு என்ன விசேஷம்? வடை பாயசம்னு தூள் கிளப்புற!

அது ஒண்ணும் இல்லீங்க...... உங்க சொந்தக்காரங்க எல்லாம் வர்றாங்க.

அப்படியா? யாருடீ செல்லம் அது?

உங்க மாமனார், உங்க மாமியா, உங்க மச்சினி, உங்க மச்சினர் தாங்க.


டீக்கடையில் இருவர் பேசிக் கொண்டது:

"
கறுப்புப் பூனை குறுக்கே போனால் நல்லதா, கெட்டதா? "

"
அது நீ மனுஷனா, இல்லை எலியாங்கிறதைப் பொறுத்தது! "

No comments:

Post a Comment