Friday, April 22, 2011

மீண்டும் ஒரு கவிதை :கற்ற கல்வி வீணன்றோ இவ்வுலகில்

மடிமீது தாலாட்டிய தாய் தந்தையை

மதியார் மறப்பார்


ஆத்திரத்தில் அறிவிழந்து

அறைவர், ஏசுவர் கட்டிய மனைவியை!


வரிசையில் மற்றவர் நிற்க மாற்று


வழியில் செல்வார்


'அபராதம் புகை பிடித்தால்' எனும்


அறிக்கையின் கீழே பிடிப்பார் புகையை


தத்தம் காரியத்தை துரிதபடுத்த


தருவார் ,பெறுவார் கையூட்டு


மதுவின் போதை தலைக்கேறி


மண்ணில் புரள்வார் மதிகெட்டு


பேருந்தில் தனியே பயணிக்கும்


பெண்டிரை சீண்டுவார்


கற்றிருந்தும் இவை செய்வோர்


கற்ற கல்வி வீணன்றோ இவ்வுலகில்


சாயி பாபா


No comments:

Post a Comment